Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th July 2018 13:45:42 Hours

கம்பட் சுழியோடிகளின் பயிற்சி நிறைவு விழா

முல்லைத்தீவு நாயாரு பிரதேசத்திலுள்ள இராணுவ கம்பட் சுழியோடிகள் பயிற்சி பாடசாலையில் 38 இராணுவ கம்பட் சுழியோடிகள் பயிற்சியை நிறைவு செய்த படையினர்களது பயிற்சி நிறைவு விழா (15) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.

இந்த பயிற்சிகள் 90 நாட்களை கொண்டிருந்தன இவற்றில் சுழியோடும் தொழில் நுட்பங்கள் மற்றும் நீரினுள் சாகசங்களை புரிவது தொடர்பான சிறப்பு பயிற்சிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இந்த பயிற்சி நிறைவு விழாவிற்கு பிரதம அதிதியாக வருகை தந்தார்.

வருகை தந்த இராணுவ தளபதியை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு மற்றும் இந்த பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதியான மேஜர் லங்கா அதுகோரல அவர்களினால் வரவேற்கப்பட்டு பின்னர் இராணுவ சம்பிரதாயமுறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

பயிற்சியில் கொமாண்டோ படையணியைச் சேர்ந்த கெப்டன் ஜே.ஏ.எம்.சி அமரசிங்க சிறந்த பயிற்சி மாணவனாகவும், 2 ஆவது விஷேட படையணியைச் சேர்ந்த கே.ஏ.ஐ நதீஷான் சிறந்த நீச்சல் மற்றும் சுழியோடியாகவும், 4 ஆவது விஷேட படையணியைச் சேர்ந்த கோப்ரல் பி.டீ.டப்ள்யூ கருணாரத்ன சிறந்த உடற்பயிற்சி வீரனாகவும் இந்த பயிற்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வெற்றிப் பதக்கங்களை வழங்கி கௌரவித்து படையினர்கள் மத்தியில் உரையை நிகழ்த்தினார்.

பின்னர் இராணுவ தளபதி மற்றும் அவரது தரவரிசையிலுள்ள மூத்த அதிகாரிகள் ரப்பர் படகுகளின் மூலம் கடலில் சவாரியை மேற்கொண்டனர். பின்னர் பிரமுகர்களின் வருகையையிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் இராணுவ தளபதி கையொப்பமிட்டார்.

Sneakers Store | Nike Shoes