Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2018 13:50:00 Hours

கனர் சுபர்குரோஸ் போட்டி 2018

இலங்கை பீரங்கிப் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான ‘கனர் சுபர்குரோஸ்’ போட்டிகள் 183 ஓட்டுனர்களின் பங்களிப்புடன் மின்னேரிய பீரங்கிப்படையணி மோட்டார் திடல் பூமி வளாகத்தினுள் ஞாயிற்றுக் கிழமை (29) ஆம் திகதி இடம்பெற்றது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது அழைப்பையேற்று இந்த நிகழ்விற்கு அதிதிகளாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அத்மிரால் சி விஜயகுணரத்ன அவர்கள் வருகை தந்தனர்.

இந்த போட்டிகள் பீரங்கிப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

ஸ்ரீலங்கா ஆட்டோமொபைல் ஸ்போர்ட்ஸ் டிரைவர்ஸ் அசோசியேஷன் (SLADA) இணைந்து SLAA ஆனது நிகழ்வில் ஆயிரக்கணக்கான மோட்டார் பந்தய ஆர்வலர்களை மகிழ்வித்ததுடன், வெற்றிகரமான பரிசுகளையும் கோப்பைகளையும் இந்த போட்டிகளின் ஊடாக வழங்கியது.

இந்த போட்டியில் வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அத்மிரால் சி விஜயகுணரத்ன , இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளினால் வெற்றிக் கிண்ணங்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

'கன்னர் சூப்பர்குரோஸ் - 2018' இல் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் வண்டிகளின் ஓட்டும் சாகசங்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தன. பீரங்கிப் படையணியினால் ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டிகளின் மூலம் பீரங்கிப் படையணி நலன்புரி திட்டங்களுக்கு நிதி சேகரிக்கப்படுகிறது.

இந்த போட்டியில் இராணுவ ஓட்டுனர்களும் இணைந்து மற்றைய போட்டியாளர்களுக்கு எதிராக சவாலை மேற்கொண்டு போட்டிகளில் சாதனைகளை நிலைநாட்டினார்.

பீரங்கிப் படையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் சேவையில் உள்ள பீரங்கிப் படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இந்த போட்டிகளை கண்டுகளித்தனர். Running sneakers | Nike