Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th September 2018 08:11:33 Hours

கண்டியில் ஆரம்பமான 69ஆவது இராணுவ தின நிகழ்வுகள்

இலங்கை இராணுவமானது உலகலாவிய ரீதியில் மூன்று தசாப்த காலமாக இடம் பெற்ற கொடிய யுத்தத்தை வெற்றிகொண்டு 10ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2018 அன்று 69ஆவது இராணுவ தினத்தை கொண்டாடுகின்றது.

அந்த வகையில் இவ்வருடம் 69ஆவது இராணுவ தின (ஒக்டோபர் 10) நிகழ்வானது பௌத்த கத்தோலிக்க இஸ்லாமிய மற்றும் இந்து மத வழிபாட்டு ஆசீர்வாதங்களுடன் இடம் பெற்றது.

மேலும் கண்டியில் 28ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வுகள் ஸ்ரீ தளதா மாளிகையில் (தந்ததாது) மற்றும் மஹா சங்கத்தினருக்கான அன்னதானம் வழங்கப்பட்டதுடன் இராணுவக் கொடியேற்ற நிகழ்வும் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதியவர்கள் கலந்து கொண்டார்.

அந்த வகையில் கலாச்சார ரீதியிலான நிகழ்வானது ஒக்டோபர் 1ஆம் திகதியன்;று அனுராதபுர ஜய ஸ்ரீ மஹா போதியில் இராணுவத் தளபதி மற்றும் படையினரின் பங்களிப்புடன் ஜய ஸ்ரீ மஹா போதியின் தலைமைப் பொறுப்பாளரான பௌத்த தேரர் அவர்களின் பங்களிப்போடு இடம் பெறும்.

அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 02ஆம் திகதியன்று பொறல்லையில் அமைந்துள்ள சகல புனிதர்களின் ஆலயத்தில் விசேட வழிபாடுகளும் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒக்டோபர் 03ஆம் திகதியன்று இஸ்லாமிய வழிபாடுகள் கொழும்பு 03இல் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசலில் இராணுவ முஸ்லிம் கழகத்தினரின் ஏற்பாட்டில் இடம் பெறவூள்ளது.

இதனைத் தொடர்ந்;து புதன் கிழமை (ஒக்டோபர் 04) மாலை வேளை இந்து மத வழிபாடுகள் இராணுவ இந்து மத சங்கத்தினரின் தலைமையில் கொழும்பு 13இல் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னம்பல வானேஷ்வரரர் கோவிலில் இராணுவ கொடிகளுக்கான ஆசீர்வாதம் வழங்கப்பட்டு இடம் பெறும்.

அத்துடன் கதிர்காமத்தில் அமைந்துள்ள கிரி விகாரையில் கொடிகளுக்கான ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்வானது ஒக்டோபர் 05ஆம் திகதியன்று இடம் பெறும். கிளம்பச மற்றும் முறுதென் பூஜை பௌத்த மத வழிபாடுகள் போன்றன கிரிவிகாரை (பனாகொட) பிரதேசத்தில் 1500 எண்னை விளக்குகளுடன் ஆரம்பமாகும்.

அதனைத் தொடர்ந்து காவடி நிகழ்வுகளும் கதிர்காமத்தில் இடம் பெறும். இத் கோயில் வளாகத்தில் இராணுவ கொடிகளுக்கான ஆசீர்வாத நிகழ்வுகளும் இடம் பெறும்.

மேலும் பிரித் வழிபாடுகள் ஒக்டோபர் 07ஆம் திகதி பனாகொடையில் அமைந்துள்ள ஸ்ரீ போதிராஜா ராமையில் (இராணுவ விகாரை) 1000 படையினரின் பிரதம அதிதியான இராணுவத் தளபதியவர்களின் பங்களிப்புடனும் பௌத்த மத தேரர்களின் ஒன்றுகூடலோடும் இடம் பெறும். ஹீல் தானை (காலை உணவு) 20 பௌத்த தேரர்கள் மற்றும் (சாங்கிக்க தானை) மதிய உணவு போன்றன பனாகொடை விகாரை வளாகத்தில் (08) ஆம் திகதியன்று 69ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இடம் பெறும்.

அதனைத் தொடந்து 69ஆவது இராணுவ தினமான ஒக்டோபர் 10ஆம் திகதியன்று இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் இராணுவ அணிவகுப்புடன் இந் நிகழ்வூகள் பனாகொடை இராணுவ முகாமில் இடம் பெறும்.

மேலும் இராணுவத் தளபதியவர்கள் ராகமையில் அமைந்துள்ள மீ;ள்குடியேற்றப்பட்ட இராணுவ படையினருக்கான ரணவிரு செவனவிற்கு விஜயத்தை மேற்கொண்டு நல்லிணகத்தை மேம்படுத்தும் நோக்கில் பரிசில்களை வழங்கிவைக்கவுள்ளார். அத்துடன் அனைத்துப் படையினருக்குமான இரா உணவூ (11)ஆம் திகதியன்று இடம் பெறவுள்ளது. இந் நிகழ்வில் பிரதம அதிதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றௌர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இராணுவ பௌத்த மத கழகம் இராணுவ கிறிஸ்தவ மதக் கழகம் இராணுவ முஸ்லிம் மத கழகம் இராணுவ இந்து மத கழகம் வன்னி மத்திய மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் தனியார் நிர்வாக பணிப்பகம் மீள்குடியேற்றப் பணிப்பகம் பணிப்பாளர் ஜெனரல் இராணுவ சுகாதார சேவைகள் மற்றும் இராணுவத் தலைமையகம் போன்றவற்றின் ஒருங்கிணைப்போடு இவ் 69ஆவது இராணுவ தின நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து இராணுவ தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பலவாறான நிகழ்வுகள் பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இடம் பெறவுள்ளது.

மேலதிக செய்திகள் -

1. தேசத்தின் பாதுகாவலர்களது 69ஆவது ஆரம்ப நிகழ்வு கண்டியில்

2. 69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டு நிகழ்வுகள்

3. இராணுவ தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ ஆசிர்வாத பூஜைகள்

4. இராணுவ தினத்தை முன்னிட்டு யும்மா பள்ளிவாசலில் ஆசிர்வாத பூஜைகள்

5. இராணுவத்தின் 69ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு அபிஷேக பூஜை வழிபாடுகள்

6. இராணுவத்தின் 69ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு அபிஷேக பூஜை வழிபாடுகள்

7. போதிராஜாராம விகாரையில் இடமபெற்ற ‘பிரித்’ தான நிகழ்வுகள்

8. இன்று இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழா

9. “ஏனைய பரம்பரையினருக்கு சமாதானம் மற்றும் நல்வாழ்வின் பெறுமதியை கட்டிக் காப்பது இலங்கை இராணுவத்தின் கடமை” இராணுவ தினத்தில் இராணுவ தளபதி தெரிவிப்பு

10. பத்தரமுல்லை இராணுவ நினைவு தூபி வளாகத்தினுள் இராணுவ ஞாபகாரத்த நிகழ்வு

jordan release date | GOLF NIKE SHOES