Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd March 2018 13:35:30 Hours

கண்டி பிரதேசத்தில் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் ரோந்து பணிகளில்

மக்களின் தேவையின் நிமித்தம் பாதுகாப்பிற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கருத்தை தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பாக கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட கலவர நிலைமையை தனிக்கும் பாதுகாப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். பின்பு கண்டியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு பொலிஸாருடன் பாதைத் தடை, ரோந்து பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடந்த தினங்களின் கண்டியில் ஏற்பட்ட கலவர நிலையை தனிக்கும் நடவடிக்கையின் நிமித்தம் இலங்கை இராணுவத்தினர் பணிகளில் அமர்த்தப்பட்டனர். அச்சமயத்தில் இராணுவ தளபதி கண்டி பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார். அப்போது அங்குள்ள சமய மத தலைவர்கள், வியாபாரிகள் மற்றும் அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

கடந்த தினங்களில் கண்டியில் ஏற்பட்ட கலவர நிலையை தனிப்பதற்கு இலங்கை இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை வழங்கி கண்டியில் சமாதான நல்லிணக்க நிலைமைகளை கொண்டு வந்ததாக இராணுவ தளபதி கூறினார்.

கடந்த 20 ஆம் திகதி இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் இராணுவத்தினர் 24 மணித்தியாலமும் நடமாடும் கண்காணிப்பு ரோந்து நடவடிக்கைகளில் பொலிஸாருடன் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முஸ்லீம் மத குருமார்களின் வேண்டுகோளுக்கமைய திகன, அகுரன மற்றும் பூஜாபிடிய பிரதேசங்களில் கலவர நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை இராணுவம் மற்றைய பாதுகாப்பு படையினருடன் இணைந்து கடமைகளில் ஈடுபட்டனர். இராணுவ தளபதி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 11 ஆவது படைப் பிரிவிற்கு விடுத்த பணிப்புரைக்கமைய 72 மணித்தியாலயத்திற்குள் இலங்கை இராணுவம் கலவரத்திற்கு உள்ளான பிரதேசங்களிற்கு அனுப்பப்பட்டன.

இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய கலவரம் ஏற்பட்ட பிரதேச நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக ‘மக்களுக்கு அனைத்து தேவைகள்’ , கட்டிட சீர்திருத்த பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் மற்றும் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க டனவக அவர்கள் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அரசின் நிதி மற்றும் காலத்தை சேமிக்கும் நோக்கத்துடன் இராணுவத்தினால் கடந்த தினங்களில் கண்டி திகன –கென்கல்ல வீதியில் இரு இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட கலவர நிலைமையின் போது சேதத்திற்கு உள்ளான வீடுகள் சீர்திருத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் பணிமனையின் வேண்டுகோளுக்கமைய ஒரு லட்சம் ரூபாய் நிதி அமைச்சினால் நஸ்ட்ட ஈடாக வழங்கப்பட்டது. தற்பொழுது 150 க்கு அதிகமான வீடுகளுக்கு நஸ்ட்டஈடு வழங்கப்பட்டது.

கடந்த தினங்களில் ஏற்பட்ட கண்டி நிலவரத்தை தனிப்பதற்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மற்றைய படைத் தலைமையகங்களிலிருந்து கடமையில் ஈடுபட்ட படையினர் 11 ஆவது படைப் பிரிவு தலைமையக கட்டளையின் கீழ் கடமைகளில் அமர்த்தப்பட்டனர்.

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீர்ர்கள் உள்ளடக்கப்பட்ட 250 பேர் கலவரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டனர. இந்த பணிகளின் நிமித்தம் அரசு மற்றும் நகராட்சி மன்றத்திற்கு கூடுதலான நிதி எஞ்சியிருந்தது.

Buy Kicks | Sneakers Nike