Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st October 2018 16:00:48 Hours

உள்ளரங்க ‘Rowing’ போட்டி – 2018

பனாகொடை விளையாட்டு உள்ளரங்கத்தில் ஒக்டோபர் மாதம் 25 – 26 ஆம் திகதிகளில் உள்ளரங்கு ‘Rowing’ போட்டிகள் இடம்பெற்றது.

இந்த இறுதிச் சுற்றுப் போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்கள் இராணுவ ‘Rowing’ சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜே.ஆர் குலதுங்க அவர்களது அழைப்பையேற்று வருகை தந்தார்.

இந்த போட்டிகள் இராணுவம் மற்றும் சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

போட்டியில் பங்கு பற்றி தங்கம், வெள்ளி , உலோக பதக்கங்களை பெற்ற வெற்றியாளர்களுக்கு இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த பதவி நிலை பிரதானி வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

இந்த போட்டிகளில் இராணுவ மகளீர் அணியினர் சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அத்துடன் இராணுவ பொது சேவைப் படையணி, இலங்கை சமிக்ஞை படையணி வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டனர்.

இந்த போட்டிகளில் சிறந்த ‘Rowing’ வீரனாக எம்.என்.எஸ் குணரத்ன அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த ‘Rowing’ வீராங்கனையாக இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த ஜே. மயுங்கா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கை இராணுவத்தினால் இந்த போட்டிகள் 1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது Sports News | adidas Yeezy Boost 350