Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th October 2017 00:00:40 Hours

உலகப் புகழ்பெற்ற இலங்கை இராணுவம் 68 ஆண்டுகளை தாண்டியுள்ளது

இலங்கை இராணுவம் எமது தேசத்திற்கு கௌரவத்தை பெற்றுத்தந்து 68 வருடங்களை பூர்த்தி செய்து நாளை செவ்வாய்க் கிழமை (10) ஆம் திகதி தனது இராணுவ தின நிகழ்வை கொண்டாடுகின்றது.

இலங்கை இராணுவம் 1949 ஆம் ஆண்டு சிலோன் இராணுவமாக ஆரம்பிக்கப்பட்டு 1972 ஆம் ஆண்டு இலங்கை இராணுவமாக மாற்றப்பட்டு தற்பொழுது 68 ஆண்டு பூர்த்திக்களை முழுமையாக்கியுள்ளது.

அப்படியான இலங்கை இராணுவம் தனது உச்ச நிலையை தாண்டி 2009 ஆம் ஆண்டு நாட்டின் கொடுரமான பயங்கரவாதத்தை ஒழித்து அப்பாவி பொது மக்களை மீட்டு உலகெங்கிலும் சிறந்த பெயரை பெற்றுள்ளது. பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான இலங்கையின் வெற்றியை பற்றியும், சமாதானத்தை நிலைநாட்டி உலகத்தை வியக்க வைத்த கொடிய பயங்கரவாதத்தை ஒழித்து புகழ் பெற்ற இராணுவமாகும்.

எமது இராணுவம் 24 படையணிகளை கொண்டு நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் தங்களது சிறந்த சேவையையும் கிழக்கு மற்றும் வடக்கு பிரதேசங்களிலும் சேவைகளை ஆற்றிக் கொண்டு செல்கின்றது. அத்துடன் நாட்டின் பல அபிவிருத்திகளையும் மேற் கொண்டு வருகின்றது. உலகின் அச்சம் கொண்ட கொடிய பயங்கரவாதத்தை தோற்கடித்து தனது கௌரவத்தை வளர்ச்சியடையச் செய்துள்ளது. அதன் பிரகாரம் இலங்கை இராணுவம் தனது 68 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவின் தலைமையில் (10) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பனாகொடை இராணுவ குடியிருப்பு முகாமில் கொண்டாடள்ளது.

இராணுவம் தற்பொழுது நாட்டின் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு எமது தேசத்தின் வளர்ச்சிகளை கட்டியெழுப்பியுள்ளது உதாரணமாக பொறியியலாளர் சேவை, கட்டிட நிர்மாண பணிகள், தொலைத் தொடர்பு சேவைகள், இயற்கை அழிவுகள். டெங்கு வேலைத் திட்டங்கள் , மனிதாபிமான உதவிகள மற்றும் பல அரசு மற்றும் தனியார் தேவைகளை சிறந்த முறையில் மேற்கொண்டுள்ளது.

அதனை போல் விளையாட்டு துறைகளில் பல சாதனைகளை புரிந்து சர்வதேசம் மற்றும் பரா ஒலிம்பிக் மற்றும் மாவட்ட ரீதிகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்று அத்துடன் மகளீர் மட்டங்களுக்கான போட்டிகளிலும் பங்கு பற்றி இலங்கை இராணுவத்திற்கு சிறப்பை பெற்றுத் தந்துள்ளது.

நாட்டின் 68 வது இராணுவ ஆண்டு தினத்தை முழுமையாக்கிய இலங்கை இராணுவம் நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளை விரைவுபடுத்த சுறுசுறுப்பாக செயல்படுவதுடன் அதே சமயம், நல்லிணக்க நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மதிப்புகள் பாதுகாக்கவும் உதவுகின்றது.

இங்கு இராணுவ தளபதியின் செய்தி முழுமையடைகின்றது

இலங்கை இராணுவத்தின் 68 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதியின் உரை

நாட்டின் இறையான்மை ஆட்புள ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக அதி சிறந்த கடமைகளை புரியும் இலங்கை இராணுவத்தின் 68 ஆவது வெற்றி ஆண்டு தினத்தை முன்னிட்டு எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

கடந்து சென்ற 68 வருட காலமாக நாட்டிற்கு ஏற்பட்ட எச்சரிக்கை மற்றும் சவால்கள் தாய் நாட்டின் இறையான்மையையும் ஆட்புள ஒருமைப்பாட்டையும் மக்களது வாழ்க்கையின் பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தினால் ஆற்றும் கடமைகள் மிகப் பெரிய சேவையாகும். இந்த நாட்டிற்காக தம்மை தியாகம் செய்துள்ள படையினரின் மிகப் பெரிய சேவையின் நிமித்தம் இன்று நாம் அனைவரும் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய நிலை உருவாகியுள்ளது. மேலும் நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் இயற்கை அழிவுகளின் போது எம்மால் ஆற்றிய சேவையை இச் சமயத்தில் நினைவு கூற விரும்புகின்றேன்.

நாட்டின் இறையான்மையை ஆட்புள ஒருமைப்பாட்டை நிலை நாட்டுவதற்காக தம்மை அர்ப்பணித்த இராணுவத்தினர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படையினர்களை இத்தருணத்தில் நான் நினைவு கூற விரும்புகின்றேன். மேலும் அன்று தொடக்கம் இராணுவத்திலிருந்து சிறந்த சேவையாற்றிய இராணுவ தளபதிகள்,இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள்,படை வீரர்கள்,இராணுவ சிவில் ஊழியர்கள் மற்றும் இராணுவ குடும்பத்தினரது குடும்பங்களுக்கும் எனது நல் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

இலங்கை இராணுவத்தின் முன் பயணத்தை நோக்கி செல்வதற்கான நல்வழி மற்றும் இலக்குகளுக்கான ஒத்துழைப்பை வழங்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் படைத் துறைகளின் முனைஞரும் பிரதானியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன அவர்களை இந்த நிகழ்வின் போது கௌரவத்துடன் நினைவு கூறுகின்றேன்.

தற்பொழுது சமாதான நிலையில் சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமையை இலங்கை வாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது எமது இராணுவத்தின் பொறுப்பாக அமைகின்றது. மேலும் நாட்டின் இறையான்மை மற்றும் ஆட்புள ஒருமைப்பாடு பாதுகாப்பிற்கு மேலாக காலத்திற்கு காலம் ஏற்படும் அனைத்து விடயங்களுக்கும் முகமளித்து மக்களது வாழ்க்கையை பாதுகாத்து நாங்கள் வென்றெடுத்த சுதந்திரத்தின் பெறுமதியை எமது எதிர்கால சங்கதியினர் கொண்டு செல்வதற்கான பொறுப்புக்கள் எமது கையில் உள்ளன.

இவ்வாறாக இந்த பொறுப்பை நிறைவேற்றும் சமயத்தில் இராணுவ பிரதி விம்பத்திற்கு பங்கம் விளைவிக்காத வகையில் உயர்ந்த மட்டத்தில் ஒழுக்கத்தை முன் வைத்துச் செல்லுதல் வேகமாகவும் உதாரணமாகவும் ஒரே நோக்கத்தை நோக்கி செல்லுதல் மிக முக்கிய விடயமாக அமைகின்றது.

மேலும் அபிவிருத்தி செய்ற்பாடுகளின் போது தமது அர்ப்பணிப்பை வழங்கி நாட்டின் பொருளாதார சமூகம் மற்றும் கலாச்சார பெறுமதியை பாதுகாப்பதும்,இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்காக அர்ப்பணிப்பை மேற்கொள்ளுதல் எமது பொறுப்பாகும். சிறப்பாக உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் முன் கடமைகளை மேற்கொள்ளுதல் நாட்டின் சிறந்த கௌரவ நாமத்தை இலங்கை இராணுவத்தினால் பெற்றுக் கொள்ளமுடியும். இதற்கான உங்களது பாரிய ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கின்றேன்.

போர் நடவடிக்கையின் போது உயிர் நீத்த படை வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற அனைத்து படை வீரர்கள் மற்றும் இராணுவ குடும்ப அங்கத்தவர்களுக்கு இராணுவ நலன்புரி நிமித்தம் வழங்கப்படும் சேவைகளை உயர்த்தியும் தற்பொழுது வழங்கிவரும் நலன்புரி சேவைகளை மேலும் சிறப்பாக வழங்குவதற்கான வழிமுறைகளை மேறகொண்டு இராணுவத்தினரது மனநிலையை வளர்ச்சியடையச் செய்யும் திட்டங்களை மேற்கொள்ளுவேன் என்று இத்தருணத்தில் கூற விரும்புகின்றேன்.

நாட்டின் சமாதானத்திற்காக உயிர் நீத்த படை வீரர்கள்,அங்கவீனமுற்ற படை வீரர்கள்,தற்பொழுது சேவையில் உள்ள இராணுவத்தினர்,இராணுவ சிவில் ஊழியர்கள் மற்றும் இராணுவ குடும்ப அங்கத்தவர்களுக்கு இந்த இராணுவ தின நிகழ்வின் போது நல்வாழ்த்துக்களை கூறவிரும்புகின்றேன்.

68ஆவது ஆண்டு புர்த்தி விழாவை கொண்டாடும் இலங்கை இராணுவம் தனது சேவையை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளுவதற்காக பொறுப்புடன் செயற்படக்கூடிய சக்தியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை புரிகின்றேன்.

உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் உருவாக வேண்டும்.

latest Running | GOLF NIKE SHOES