Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2019 22:12:58 Hours

உடவலவே இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணிக்கு இராணுவ தளபதி விஜயம்

உடவலவேயில் அமைந்துள்ள இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பட்டறையில் பழைய வாகனங்களை பழுது பார்த்து சர்வதேச தரங்களில் கனரக இராணுவ வாகனங்கள் படையினரால் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த (01) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலமையகத்திற்கு தனது விஜயத்தை மேற்கொண்டார் இவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுனர். அவர் முதல் முறையாக அனுபவத்தை எடுத்துக் கொள்ளும் நிமித்தம் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இராணுவ தளபதியவர்களால் பல வாகனங்களின் உற்பத்திகள் பாரவையிடப்பட்டன அதன் பின்னர் இந்த வாகனங்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் யூத்ததின் போது குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டதில் மோதல்கள், மற்றும் சாலை விபத்துக்களில் மோசமாக சேதமடைந்த பல கனரக வாகனங்களுக்கு பழுது பார்த்துள்ளது என்பதை தளபதி கவனித்தார். அதே இடத்தில் ஐ.நா. அமைதிகாக்கும் கடமைகளுக்கு பொதுவாக தயாரிக்கப்படும் ஒரு கவச வாகனமும் இராணுவ தளபதியவர்களால் வழங்கப்பட்டன. அத்துடன் இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எம். ஏ. ஏ. டி. சிரினக மற்றும் பட்டறையின் தளபதி, லெப்டினன்ட் கேர்ணல் பி. விதானகே ஆகியோர் உடவளவே பட்டறைப் தொடர்பாக குறியீட்டு சைகை மூலம் விரிவு படுத்தினர்.அதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர;கள் மின்சார மற்றும் இயந்திர கண்டுபிடிப்புகள் மற்றும் அவர்கள் செய்யும் சேவையின் பங்களிப்பு ஆகியவற்றின் மதிப்பை சுட்டிக்காட்டினார்.

அத்துடன் படையினர்களின் தொழில் நுட்பத்திற்கு இடையிலான நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளவும் அவர் அவர்களுக்கு விரிவுரைகள் வழங்கினார். இராணுவ தளபதி அவர்கள் வெளியேறும் முன், பார்வையாளர்களின் புத்தகத்திலுள்ள கையொப்பமிட்டு பாராட்டுக்களைத் தெரிவித்தார். இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணிக்கு வருகை தந்த இராணுவ தளபதியை இப் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எம். ஏ. ஏ. டி. சிரினக மற்றம் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி மற்றும் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பட்டறையின் கட்டளை தளபதி லெப்டினன்ட் கேர்ணல் பி வித்தானஹே அவர்களால் படைத் தலைமையக வளாகத்தில் வைத்து வரவேற்கப்பட்டன, இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினரும கலந்து கொண்டனர். ; buy shoes | NIKE AIR HUARACHE