Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th October 2018 19:12:28 Hours

இலேசாயுத காலாட் படையணியின் ‘அபிமன் முதுநத’ நினைவு தின நிகழ்வு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் ‘அபிமன் முதுநத’’ நினைவு தின நிகழ்வுகள் பனாகொட இராணுவ முகாமில் (27) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 29 அவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு இந்த நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார்.

இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.ஆர் குலதுங்க அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி அவர்கள் வருகை தந்தார்.

இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் அனைத்து சமய தலைவர்களின் பங்களிப்புடனும் ஆசிர்வாதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இலங்கை இராணுவத்திலுள்ள 168 அதிகாரிகளும் 3700 படை வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டன. அத்துடன் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் எம்.எம். கித்சிரி அவர்களால் வரவேற்பு பேச்சும் இடம் பெற்றது.

தன் உயிரை தியாகம்செய்த இப் போர் வீரர்களுக்காக சிறப்பு அணிவகுப்பு மரியாதை மற்றும் மத ஆசர்வாதங்கள் இடம் பெற்றதை தொடர்ந்து அதே நேரத்தில் அஞ்சலி செய்தியும் வாசிக்கப்பட்டது. பின்னர் 29 மத குருமார்களுடன் இரவு பிரித் பூஜை நிகழ்வும் இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி அவர்களால் காலாட் படை போர் வீரர்களின் நினைவு தூபிக்கு மரியாதை செலுத்தப்பட்டன. பின்னர் வருகை தந்த உரவினர்களுக்கிடையே கலந்துரையாடி அவர்களின் மறக்க முடியாத தியாகங்களையும் பாராட்டினார்

அதனைத் தொடர்ந்து பிரதான அதிதியவர்களால் மலர் வைத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் அத்துடன் இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரிகள், படையணியின் ஆணைச்சீட்டு அதிகாரிகள், படையினர், துணைவியர், பெற்றோர்கள், மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந் நிகழ்விற்கு இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான சாந்த கொட்டகொட, ஜெனரல் தயா ரத்நாயக்க, ஓய்வுபெற்ற வீரர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், சேவையில் உள்ள அதிகாரிகள், மற்றும் ஏனைய படையணிகளின் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். Sports Shoes | 『アディダス』に分類された記事一覧