Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2019 08:09:57 Hours

இலங்கையில் இடம்பெற்ற ‘மித்ர சக்தி’ அப்பியாச பயிற்சிகள் நிறைவு

இலங்கை – இந்தியா கூட்டுப்படை ‘மித்ர சக்தி’ அப்பியாச பயிற்சிகளின் நிறைவு விழா தியதலைவையில் அமைந்துள்ள 1 ஆவது கெமுனு ஹேவா படையணியில் ஏப்ரல் (8) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இந்திய இராணுவத்தின் கட்டளை அதிகாரியான கேர்ணல் பார்தசாரதி ரோய் அவர்களது தலைமையில் இந்திய –இராணுவ அதிகாரிகள் 11 பேரையும், 109 படை வீரர்களையும் உள்ளடக்கியும், இலங்கை இராணுவத்தினர் 110 பேரின் பங்களிப்புடன் அணிவகுப்பு கெரவ மரியாதைகள் இடம்பெற்றது.

கூட்டுப்படை அப்பியாச பயிற்சியானது இரு நாடுகளுக்கு இடையிலான செயற்பாட்டு அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடனும், இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு இடையில் உறவு முறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஏழாவது வருடமாக 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி இந்த அப்பியாச பயிற்சிகள் ஆரம்பமானது.

இந்த அப்பியாச பயிற்சி இறுதி நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ காலாட்படை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்.ஏ.டீ.ஏ.டீ குணவர்தன அவர்கள் வருகை தந்து இராணுவத்தினருக்கு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

இராணுவ காலாட் பணியகத்தின் பணிப்பாளர் ஜெனரல் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிடிவலான அவர்களது பணிப்புரைக்கமைய இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. best Running shoes | Nike