Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2017 20:58:40 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் ‘பாபள’ மேளா நிகழ்வு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 2017 ஆம் ஆண்டிற்கான ‘பாபள மேளா’ இறுதி நிகழ்வு ஹிக்கடுவ பொது மைதானத்தில் 24 ஆம் திகதி ஞாயிற்று கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வுகள் டிசம்பர் மாதம் 23 – 24 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுகளின் போது 30,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு இன்பமுற்றனர்.

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இந்த நிகழ்வுகளின் போது சீதுவ சகுரா' மற்றும் சனிதப இன்னிசைக் குழுவினரது இன்னிசை நிகழ்வுகள் இடம்பெற்றது. அத்துடன் இராணுவ சாகச கண்காட்சி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

‘பாபள மேளா’ இறுதி நாள் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் கலந்து கொண்டார்.

ஹிக்கடுவை – பெத்தேகம பிரதான வீதியில் 160,000 ரூபாய் பெறுமதியில் பஸ் தரிப்பிடமும், தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவருக்கும் மருத்துவ வசதிகளும் இந்த நிகழ்வின் போது கிடைக்கப்பெற்ற நிதிகளின் மூலம் இந்த படையணியினால் வழங்கப்பட்டது.

முதல் நாள் இடம்பெற்ற நிகழ்விற்கு பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லாரியின் கட்டனை தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்தார்.

bridgemedia | Nike Air Max 270