Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2018 19:09:07 Hours

இலங்கை இராணுவத்தினரின் கைபந்து விளையாட்டு போட்டிகள்

இலங்கை இராணுவ கைப்பந்து விளையாட்டு கழகத்தினரின் ஏற்பாட்டில் முதல் தடவையாக இலங்கை கைப்பந்து பிஸ்டா 2018 க்கான விளையாட்டு போட்டி (04) ஆம் திகதி செவ்வாய்கிழமை பனங்கொடையில் உட்புற விளையாட்டரங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போட்டியில் நாடுபூராவும் உள்ள 23 தொகுதிகளில் ஆண் விளையாட்டு குழுவினர்கள் 5 மகளிர் குழுக்களை உள்ளடக்கி பலபோட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆதன் படி இப் போட்டி நிகழ்வில் பிரதான அதிதியாக இலங்கை இராணுவத்தின் மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிமல் விதானகே அவர்கள் கலந்துது கொண்டார். அத்துடன் பணிப்பாளர் ஜெனரல் தர உத்தரவாதம் மற்றும் ஆய்வு மேஜர் ஜெனரல் பூரக்க செனவிரத்ன மற்றும் உளவியல் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அத்துல ஹென்னதிகே மற்றும் பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆத்துடன் இப் போட்டிக்கு நுழைவு இலவசமாக இலங்கை கைப்பந்து கழகத்தினரால் வழங்கப்பட்டதுடன் இப் போட்டிகள் டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை வரை நடைபெறும். இதன் இறுதி போட்டிகள் (8) ஆம் திகதி சனிக்கிழமை இடமபெறவுள்ளன.

அதற்கமைய இக் கைப்பந்து விளையாட்டானது இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் கைப்பந்து விளையாட்டு பணிப்பகத்தினரால் இவ் விளையாட்டு 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு அறிமுகப்படுத்தியதில் இருந்து இலங்கையில் மிகப் பெரிய அளவில் இக் கைப்பந்து போட்டிக்கு ஊக்கமளிப்பதில் குறிப்பிடத்தக்க விடயமாக இலங்கை வகித்துள்ளன.latest jordan Sneakers | nike air max 95 obsidian university blue book list