Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2018 10:05:51 Hours

இலங்கை இராணுவ தளபதி பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு மரியாதை

பாக்கிஸ்தானுக்கு சமீபத்தில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் பாக்கிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வாவின் அழைப்பின் பேரில் பாகிஸ்தானின் இஸ்லாமிய குடியரசின் மேன்மை தங்கிய ஜனாதிபதியான மம்னுன் ஹுசைன் அய்வான்-ஈ-சதர், அவர்களை பாக்கிஸ்தான் தலைநகரிலுள்ள இஸ்லாமாபாத் சிவப்பு வலயத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி அரன்மனையில் சந்தித்தார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்கும் நாடாகும். நாடாகும். "இலங்கை நாட்டுடன் ஏற்பட்டுள்ள நட்பையிட்டு பாக்கிஸ்தான் பெருமை பெற்றுள்ளதுடன், எமது உண்மையான நண்பர்களுனான நெருக்கமான ஒத்துழைப்புடன் பல்வேறு துறைகளில் நாம் கொண்டுள்ளோம்" என்றும் ஜனாதிபதி ஊடக அறிக்கையின் மூலம் வெளியிட்டார்.

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு எதிர்காலத்தில் வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். அதே ஊடக அறிக்கையில் தளபதி தனது தங்கியின்போது விருந்தோம்பல் மீது தனது மகிழ்ச்சியை வெளியிட்டார், இராணுவத்தின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மற்றும் பாகிஸ்தானின் ஜனாதிபதி ஹொன்தொன் மம்னுன் ஹுசைன் அவர்களின் சுமூகமான பேச்சுவார்த்தைகளின் இறுதியில், நல்லெண்ணங்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான அடையாளங்களாக நினைவுச் சின்னங்களை பரிமாறினர்.

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா அவர்கள், பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வாவையின் அழைப்பின் பேரில், ஏப்ரல் கடைசி வாரத்தில் பாகிஸ்தானிற்கு விஜயத்தை மேற்கொண்டார். அதன்போது அவர் இராணுவ முகாம்கள், பழங்குடி தொழிற்சாலைகளை பார்வையிட்டார்.

லெப்டினன்ட் ஜெனரல் சேனநாயக்க அவர்களுடன் கௌரவ பிரதம மந்திரி, ஷாஹித் காக்கன் அபாசி அவர்களை இஸ்லாமபாத் தலைநகரில் உள்ள பிரதம மந்திரி செயலகத்தில், சந்தித்தார்.

url clone | Air Jordan 1 Retro High OG University Blue - Gov