Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th February 2019 19:12:35 Hours

இலங்கை அமைதி காக்கும் பணியின் போது பலியான இராணுவத்தினரது பூதவுடல் நேற்று பாரமேற்பு

மாலியில் ஏற்பட்ட குண்டு தாக்குதலின் போது பலியான இலங்கை அமைதி காக்கும் படையணியைச் சேர்ந்த மேஜர் டப்ள்யூ.டீ ஜயவிக்ரம மற்றும் சாஜன் எஸ்.எஸ. விஜயகுமார் போன்றவர்களது பூதவுடல் நேற்று பகல் (4) ஆம் திகதி பண்டாரநாயக சரவதேச விமான நிலையத்தில் வைத்து ஐக்கிய நாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி அவர்களினால் இலங்கை இராணுவத்திற்கு கையளிக்கப்பட்டன.

ஐக்கிய நாட்டின் கட்டளை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டெனிஷ் கிலன்ஷ்போர் அவர்களினால் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களுக்கு கையளிக்கப்பட்டன. பின்னர் இவர்களது பூதவுடலுக்கு இலங்கை இராணுவத்தினரால் கௌரவ அணிவகுப்புகள் இராணுவ தளபதி உட்பட இராணுவ அணியினரால் வழங்கப்பட்டு கௌரவித்து வரவேற்கப்பட்டது.

பின்னர் இவர்களது பூதவுடல் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

விமான நிலையத்தில் இவர்களது பூதவுடல்களுக்கு கௌரவ மரியாதை செலுத்துவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மதிப்புக்குரிய ருவன் விஜயவர்தன, ஐக்கிய நாட்டின் வதிப்பிட ஒருங்கினைப்பாளர் செல்வி ஹனா சிங்கர், இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.ஆர் குலதுங்க, இராணுவ பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன, பாதுகாப்பு அமைச்சின் தொடர்பாடல் அதிகாரி மேஜர் ஜெனரல் டீ.ஏ.ஆர் ரணவக, பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் சுமித் அதபத்து, வெளிநாட்டு நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஏ.எல்.பி.எஸ் திலகரத்ன, இராணுவ தலைமையக பட்டாலியன் அலுவலகத்தின் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையகத்தின் தலைமை ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் டப்ள்யூ.டப்ள்யூ.என்.பி விஜயசிங்க போன்ற அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.

ஐக்கிய நாட்டு கட்டளை தளபதியின் உதவி அதிகாரியான மேஜர் மெட்ஷ் இவார்ஷன், விக்டர் பேர்ஜர்ன் மற்றும் பீடர் ஸ்டோம் மேக்‌ஷ் போன்ற ஐக்கிய நாட்டு அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.Buy Kicks | FASHION NEWS