Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2019 12:52:00 Hours

இராணுவத்தில் புதிய உபகரன மாஸ்டர் ஜெனரல் பதவியேற்பு

இலங்கை இராணுவ தலைமையகத்தில் புதிய உபகரன மாஸ்டர் ஜெனரல் பதவிக்கு மேஜர் ஜெனரல் இந்திரஜித் வித்யானந்த அவர்கள் இன்று (14) ஆம் திகதி காலை சமய அனுஷ்டான ஆசிர்வாதத்தின் பின்பு உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்.

இதற்கு முன்பு இந்த பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் பிமல் விதானகே அவர்கள் ஓய்வு பெற்று செல்வதையிட்டு இந்த பதவிக்கு இந்த அதிகாரி நியமிக்கப்பட்டார்.

இவரது பணிமனையில் மஹா சங்க பதுள்ளே ஜினரத்ன தேரர், ஶ்ரீ குணவர்தன தேரர் அவர்களது தலைமையில் ‘செத் பிரித்’ புண்ணிய ஆசிர்வாத நிகழ்வுகள் இடம் பெற்றன.

இச்சமயத்தில் மேஜர் ஜெனரல் சி.எம்.டீ.பி சந்திரசேகர, இராணுவ உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட உபகரன மாஸ்டர் ஜெனரல் இந்த பதவியில் நியமிப்பதற்கு முன்பு கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதியாகவும் , திருகோணமலையில் உள்ள இராணுவ லொஜஸ்டிக் கல்லூரியில் கட்டளை தளபதியாகவும் கடமை வகித்துள்ளார். trace affiliate link | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ