Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th January 2018 19:24:04 Hours

இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செய்திகளைத் தவிர்க்குமாறு இராணுவத்தினரின் வேண்டுகோள்

மிக அன்மையில்இராணுவத்தினரை சங்கடத்திற்குள்ளாக்கும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்ட விடயமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக படையினரின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகள் இனம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்படுவது இராணுவத்தினரினால் கண்காணிக்கப்பட்டுள்ளது. இராணுவப் படையினரின் வெளிநாட்டுப் பயண வருமாணம் உணவுஅங்கவீனமுற்ற படையினரின் வருமானம் போன்ற விடயங்கள் உண்மையற்ற கூற்றாக அன்மைக் காலங்களில் ஊடகங்களில் வெளிக்கொணரப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக இராணுவத்தினரால் வெளிநாட்டு பயிற்ச்சிகள் மற்றும் சேவைகளுக்காக இராணுவத்தினால் அனுப்பப்படும் படையினரின் வருமாணம் தொடர்பான தௌpவானதுமான நிகரானதுமான விளக்கத்தை தௌpபடுத்தல் அவசியம்.

அந்த வகையில் இப் பயிற்ச்சிகளுக்காக அனுப்பப்படும் முப் படை அதிகாரிக்கான ஒப்பந்தம் மற்றும் மாதாந்த வருமானம் போன்றன இப் படையினர் தமது நாட்டை விட்டு செல்லும் முன்னர் இப் பயிற்ச்சிகளை முன்னெடுக்கும் கம்பனிகள் மற்றும் இலங்கை இராணுவப் படையினரின் ஒருங்கிணைப்போடு இவர்களது முன்னிலையில் படையிர் ஒப்பமிட்ட பின்னரே நாட்டை விட்டுவெளியேறுவர். இதன் போது பொதுவாக இவர்களுக்கான தங்குமிட வாழ்வாதார வசதிகள் போன்றனவும் இவர்களுக்கு வழங்கப்படல்.

அந்த வகையில் 2016 2017 ஆண்டுகளில் இராணுவத்தினரின் வெளிநாட்டு சேவைகளுக்காக கிடைக்கப்பெறவூள்ள ருபா 200 மில்லியன் தாமதமடைந்த நிலையில பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் அவை ஜனவரி 2018இல்வழங்குவதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் படையினர் தமது கடமையில் இருக்கும் வேளை அவர்களுக்கு போசனை மிக்க மதிய உணவுவேளை தொடர்பான தவறான தகவலும் பிரசுரிக்கப்பட்டமை இராணுவத்தினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் போசனை மிக்க இராணுவம் - போசனை மிக்க தேசம் எனும் திட்டமானதுகொழும்பு இராணுவத் தலைமையகம் மற்றும் போசாக்கு தொடர்பான ஆலோசனையாளர்களின் அறிக்கையின் படிஇராணுவத் தளதபியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் சேவையின் போது முகாமிற்கு உள்ளே மற்றும் வெளியே சேவையாற்றும் படையினருக்கான போசாக்கு மிக்க உணவு வேளை வழங்கப்பட்டல் வேண்டும் என்ற நோக்ககோடு அன்மையில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில்சேவையாற்றும் படையினருக்கு இத் திட்டத்தை முன்னெடுக்குமாறு உயர் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது .

இத் திட்டமானது மருத்துவ மற்றும் போசாக்கு ஆலோசகர்களின் அனுமதியூடன் நாளாந்தம் படையினருக்கு வழங்கப்படும் உணவு வேளையானது அவர் அல்லது அவளது உடல் வலிமையை மேம்படுத்தும் நோக்கில் 3500 – 4000 கலோரி உள்ளடக்கப்படுதலின் அவசியத்தை எடுத்துக்காட்டிதை மையமாகக் கொண்டே இத் திட்டமானது விக விரைவில் முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் இப் போசாக்கான உணவுத் திட்டமானது மேற்க பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் அனைத்து படையினர்களுக்கும் தரமான போசாக்கான உணவை வழங்கும் நோக்கில் ஜனவரி 1ஆம் திகதி 2018 வரை அமுலுக்கு வரும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது. அதேவேளை இராணுவ முகாமிற்கு தமது வீட்டிலிருந்து சேவைக்கு சமூகமளிக்கும் படையினருக்காக புதிய உணவு வேளையை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடள் இப் புதிய திட்டமானது அனைத்து படையினரதும் உணவு வருமானம் தொடர்பாக காணப்படுகின்றது.

யாதேனும் .இராணுவப் படைவீரருக்கு தமது வீட்டிலிருந்து மாத்திரம் மதிய உணவை உட்கொள்ளல் மற்றும் இத் திட்டத்திற்கு விருப்பமில்லையாயின் அல்லது வேறேதும் பிரச்சினைகள் காணப்படின் தமது பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரியவர்களிடம் கலந்துரையாடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் இதன் போது எவ்வித வருமானக் குறைவும் ஏற்படாது.

அத்துடன் சில அரசியல் நோக்கங்களுக்காக யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற இராணுவப் படையினரின் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான 100வீத ஓய்வூ தியத்தை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்இராணுவத்தினரால் அதிகார பூர்வமாக வெளியிடப்படுகின்றஆட்சேர்ப்பு போன்ற வீடியோக்களை சில அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் படையினருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் உள்ளடங்கப்படுவது மிகவும் சங்கடத்திற்குறிய விடயமாகும் .

தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை கட்டியெழுப்பும் நோக்கில் செயற்படும் இலங்கை இராணுவத்தை இவ்வாறான கீழ்த்தனமான சமூகத்தில் இழிவை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இராணுவத்தை ஈடுபடுத்த வேண்டாமென அனைவரிடமும் இராணுமனது தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றது.

latest Nike release | Sneakers