Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th May 2017 17:56:17 Hours

இராணுவத்தினர் ஆறு மாத காலத்தினுள் வட்டாராம விகாரையில் புதிய மண்டபம் அமைத்தல்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 58வது படைத் தலைமையகத்திற்கு உரிய 583 படைத் தலைமையகத்தினால் தேசிய வெசாக் தின நிகழ்வையிட்டு ஆறு மாத காலத்தினுள் வட்டாராம ஸ்ரீ அரஹத்த மலியதேவ ரஜமஹா விகாரையில் தர்ம மண்டபம் அமைக்கப்படட்டது.

இறுதி காலத்தில் ரஹதன் வஹன்சே குடியிருந்த இந்த விகாரை தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கை அரசினால் தேர்ந்;தெடுத்து அரச ஒத்தழைப்புடன் நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மண்டபம் அமைப்பதற்கு கௌரவத்திற்குரிய பன்னல சுமேத நாயக தேரர் அவர்களினால் பொருள் உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் இராணுவ தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இராணுவ பொறியியலாளர் சேவை படையணியினரால் இந்த நிர்மாண பணி மேற்கொள்ளப்பட்டது.

583 படைத் தலைமையகத்தினால் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இந்த கட்டிட பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி முடிவடைந்தது.

50 இலட்சம் மில்லியன் செலவில் இந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 2000 பக்தர்கள் இந்த மண்டபத்தினுள் இருக்க கூடிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டள்ளது.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, 58வது படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீ.ஏ.ஆர் ரணவக, 583 வது படைத் தளபதி பிரிகேடியர் ஏ.என் அமரசேகர இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் 1,6,9 வது பொறியியலாளர் சேவை படையணி மற்றும் 8வது கெமுனு ஹேவா படையணி இந்த நிர்மாண பணிகளை மேற்கொண்டது.

Nike Sneakers Store | GOLF NIKE SHOES