Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2017 20:43:56 Hours

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் 'வித்யா பவுண்டேஷன்' அமைப்பினர் நன்கொடைகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் 'வித்யா பவுண்டேஷன்' அமைப்பினர் பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகள் வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வுகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் (27) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

அனைவரும் சமாதானத்தில் வாழக்கூடிய ஒரு இணக்கமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வடக்கிலும், தெற்கிலும் ஏழை மாணவர்களிடையே கல்வி தரத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின்தலைமையில் இந்த ஒழுங்குகள் அனைத்தும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

யாழ் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவ் மகா வித்தியாலயத்தில் 10 அதிகமான தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசு மற்றும் விளையாட்டு பொருட்களும் வழங்கப்பட்டது.

மேலும்யாழ்ப்பாணத்தில் உள்ள 15 மாணவ மாணவிகளும் அதே சந்தர்ப்பத்தில் 'சரக்ஷா இன்சூரன்ஸ் சான்றிதழ்களும் ‘ இந்த நிகழ்வின் போது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது இலங்கையிலுள்ள பிரபல நடிகை திருமதி சுனிதா வீரசிங்க, களனிபல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. நந்தலால் மாலகொட, ஓமன் லங்கா பிரைவேட். லிமிடெடின் இயக்குநர்திரு. மோகன் ஷங்கர், ‘பீபல்ஸ் கெயார்’பணிப்பாளர்திருமதி வதனி ஷங்கர், சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர்கள், மாணவர்கள் , பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Best Authentic Sneakers | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers