Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th May 2018 16:24:42 Hours

இராணுவத்தினரால் மலேசியாவில் முதன் முதலாக வெசாக் பந்தல் (தொரண) நிகழ்வு

இலங்கை மற்றும் மலேசியாவிற்கும் இடையே உள்ள உறவு முறையை தலைமுறைகளாக கொண்டு செல்லும் நோக்குடன் மலேசியாவின் இலங்கைக்கான உயர் துாதரகத்தின் ஆணையாளர் ; முன் முயற்சியால் இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் சேவைப் படையணியினரால் அமைக்கப்பட்ட இந்த 'வெசாக்' பந்தல் மலேசியாவின் கோலாலம்பூர் பிரிக்பீல்ட் பௌத்த விகாரை வளாகத்தில் சனிக்கிழமை (26) ஆம் திகதியன்று காட்சிக்கு வைக்கப்பட்டனர்.

மலேசியாவின் கோலாலம்பூர் பிரிக்பீல்ட் பௌத்த விகாரையின் பௌத்த பிக்கு மற்றும் மலேசியாவின் இலங்கைக்கான உயர் துாதரகத்தின் ஆணையாளர் ஏ.ஜே. எம் முசாம்மில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவ தளபதி லெப்டினென்னட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் வழிகாட்டலின் கீழ் புத்தரின் பிறப்பு மற்றும் அவதாரம் மற்றும் அவரின் வரலாற்று கதைகளை நினைவு கூறும் வகையில் இந்த வெசாக் பந்தல் (தொரண) இராணுவத்தின் பொறியாளர் சேவைப் படையணியினரால் நிர்மாணிக்கப்ட்டது.

வருடம் 125 க்கு முன் வரலாறு கூரும் பௌத்த மகா விகாரையினர் மற்றும் இலங்கை உயர் ஆணை அலுவலகம் இணைந்து மே மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 01 அம் திகதி வரை மலேசியா பிக்பில்ட் பொளத்த விகாரையில் வளாகத்தில் 2018 க்கான முதலாவது வெசாக் பந்தல் மற்றும் வெசாக் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் மற்றும் மலேசியாவிற்கும் 60 வருட இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த வெசாக் பந்தல் (தொரண) 60 அகலமும் 50 அடி உயரத்தில் 35,000 மின் விளக்குகளுடன் நிர்மாணிக்கப்பட்டதுடன் இந்த வர்ண வெசாக் பந்தலில் “குண்டலகேசி” அவர்களின் வரலாறும் வர்ணமயமாக்கப்பட்டது.

பௌத்த மகா விகாரையில் இந் தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவதற்கு 100,000 க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள். 1999 ஆம் வருடம் ஐக்கிய நாட்டவர்களால் இந்த தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடப்ட்டது. இந்த 'வெசாக்' பந்தல் அமைப்பதற்கு தேவையான மூலப் பொருட்கள் உபகரணங்கள் மற்றும் இரும்பு; பொருட்களும் மலேசியாவிற்கு கொண்டு செல்ல தேவையான உதவிகள் விமானப் படையினர்களால் இராணுவத்தினருக்காக விமான டிக்கட்டுகள் வழங்க மலேசியாவிற்கான இலங்கை உயர் ஆணையாளர் காரியாலயத்தில் அனுசரனையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதன்படி மலேசியாவில் நடைப்பெறும் வெசாக் பந்தலை பார்வையிட (26) ஆம் திகதி சனிக் கிழமை தொடக்கம் ஜூன் மாதம் 1 ஆம் தகதி வரை மக்களுக்காக திறந்து வைக்கப்ட்டுள்ளது.

அதன் படி திரு. மகிந்த ஜயசூரியவின் செரண்டிப் உணவகத்தினால் 17 ஊழியர்களால் போக்கு வரத்து ஒழுங்கமைத்து கொடுக்கப்பட்டதுடன் இலங்கையில் இருந்து வெசாக் பந்தலுக்காக வாகன போக்குவரத்து சேவைக்கு உதவியது.

மலேசியாவின் பௌத்த பிக்கு அவர்கள் உட்பட அரசாங்க நிறுவனங்களால் முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.

மலேசியாவில் நடைப்பெறும் 7 நாள் நிகழ்விற்காக இலங்கை இராணுவ குழுவினர் கலாச்சார மற்றும் கலை திறமைகளை வெளிப்படுத்த வுள்ளனர்.

இந்த வெசாக் பந்தலானது மலேசியாவின் இலங்கைக்கான உயர் துாதரகத்தின் ஆணையாளர் ஏ.ஜே. எம் முசாம்மில் அவர்களால் (26) ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்ட்டது.

இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் சேவைப் படையணியின் தளபதியும் இந்த பணிப்பகத்தின் ஜெனரல் பொறியாளர் சேவைப் படையணியின் மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக மற்றும் இலங்கை இராணுவப் பேண்ட் வாத்தியம் மற்றும் கலை நிகழ்ச்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பரிஸ் யூசுப் அவர்கள் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.

Sport media | Nike Shoes