Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th May 2018 13:36:20 Hours

இராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாகன போக்குவரத்து வசதிகள்

சீரற்ற காலநிலை நிமித்தம் மஹாவெவ பிரதேசம் வெள்ளத்தினால் முற்றிலும் மூழ்கிய நிலையில் (26) ஆம் திகதியன்று 16 ஆவது கஜபா படையணியன் படையினர்களால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு மஹாவெவ சந்தி தொடக்கம் மாதம்பே தனிவெல்ல தேவாலயம் வரை வாகன வசதிகளை வழங்கியுள்ளனர்.

இப் பிரதேசத்தில் நீர் மட்டம் 2 கிலோ மீட்டருக்கு அதிகமாக நீரில் மூழ்கியுள்ள நிலையில் எந்தவெரு போக்குவரத்து வசதிகள் இல்லாமல் சிக்கிதவிக்கும் இம் மக்களுக்கு 16 ஆவது கஜபா படையணியின் படையினர்களால் இராணுவ படகுகள் மூலம் போக்குவரத்து வசதிகள் வழங்கப்ட்டது.

அதன்படி 58 ஆவது படைப்பரிவின் 582 ஆவது படையின் 9 ஆவது கெமுனு ஹேவா படையணியின் படையினர்களால் (25) ஆம் திகதி வெள்ளிக் கிழமையன்று பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களுக்கு படகு வசதிகள் வழங்கியதுடன் ரத்னபுர ரெட்டியல சிலவங்சாராம விகாரையில் தற்காலிகமாக தங்கும் இட வசதிகளும் ஒழுங்கமைத்து கொடுக்கப்பட்டனர்.

அதேபோல் 9 ஆவது கெமுனு ஹேவா படையணியில் 13 படையினர்கள் அனுப்பபட்டு புலத்சிங்கள பிரதேச செயலக பரிவான பரகொட மற்றும் தம்பல போன்ற இடங்களில் வெள்ளப்பெருக்குகளில் சேதமடைந்த வீடுகள் மற்றும் குப்பைகள் நீக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

bridge media | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp