Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th February 2019 16:52:04 Hours

இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்ற தேசிய தின கொண்டாட்ட நிகழ்வு

தேசிய தின கொண்டாட்ட நிகழ்வினை முன்னிட்டு இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நாடாளவியல் ரீதியாக உள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், படைப் பிரிவு, படைத் தலைமையகங்கள், பயிற்சி நிலையங்கள், முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் பொலனறுவை மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேசிய தின நிகழ்வுகள் பொலனறுவை றோயல் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

வட மத்திய மாகாண ஆளுநர் மதிப்புக்குரிய திரு சரத் ஏகநாயக அவர்களது பங்களிப்புடன் முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு மற்றும் மாணவ சிப்பாய் படையணியின் படையினரது அணிவகுப்பு மரியாதைகளுடன் வட மத்திய மாகாணத்தில் இடம்பெற்றது.

பொலனறுவை மாவட்ட செயலாளர் திரு பண்டுக அபேவர்தன அவர்களது தலைமையில் கிழக்கு பாதுகாப்பு முன்னரங்க கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முதநாயக, 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கபில உதலபொல, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் தேசிய தின கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது.

71 ஆவது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வினை முன்னிட்டு 22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் திருகோணமலை செவனப்பிடிய நகர பிரதேசத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் முப்படை, பொலிஸார், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த 150 படையினர்களின் பங்களிப்புடன் திருகோணமலையில் தேசிய தின நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க, திருமலை மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் திரு நிமல் பெரேரா, 221 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் டீ.பி.யூ குணசேகர, 224 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஈ.ஏ.பி எதிரிவீர, அரச அதிகாரிகள் , முப்படையினர், பொலிஸார், மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள படை வீரர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில் 3-4 ஆம் திகதிகளில் கிளிநொச்சி தள வைத்தியசாலையில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இரத்ததானம் வழங்கும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் 65 ,66 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன மேலும் அக்கராயம்குளம் பிரதேச வைத்தியசாலை ,தேவன்பிடி ரோமன் கத்தோலிக கலவன் பாடசாலை, பூநகிரி வைத்தியசாலை மற்றும் வீராவில் வைத்தியசாலையில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது தலைமையில் தேசிய கொடிகள் ஏற்றி தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது. அத்துடன் கடந்த தினங்களில் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது பணிகளின் போது கடமைகளில் ஈடுபட்ட படையினருக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. Asics shoes | adidas garwen spezial white shoes - New In Shoes for Men