Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th October 2018 17:06:50 Hours

இராணுவத் தளபதியவர்கள் சர்வதேச விளையாட்டாளர்களின் திறமைக்கு பாராட்டு

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமது சிறந்த திறமையை வெளிக்காட்டிய இராணுவத்தினர் இன்று காலை (25) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் இராணுவத்தின் வீர வீராங்கனைகள் வலைப்பந்து ஆசிய பரா விளையாட்டுகள் மற்றும் கரம் விளையாட்டுகளில் தமது திறைமைகளை வெளிக்காட்டி சர்வதே ரீதியில் தங்க வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இராணுவத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அந்த வகையில் 2018ஆம் ஆண்டிற்கான 5ஆவது சர்வதேச கரம் விளையாட்டுப் போட்டியில் (வெள்ளி) பதக்கத்தையூம் 2018ஆம் ஆண்டிற்கான ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் (தங்கி) பதக்கத்தையும் மற்றும் இந்தோநேசிய 2018ஆம் ஆண்டிற்கான ஆசிய பரா விளiயாட்டுப் போட்டிகளில் (4 தங்கப் பதக்கம் 5 வெள்ளிப் பதக்கபம் மற்றும் 5 வெண்கலப் பதக்கத்தையூம்) வென்றனர். மேலும் 3ஆவது (தொண்டர்) இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் எம் டீ எஸ் ரணவீர 2018ஆம் ஆண்டிற்கான 5ஆவது சர்வதேச கரம் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இப் போட்டியாளர்களுடனான கலந்துரையாடலை மேற்கொண்டு இவர்களது திறமைகளைப் பாராட்டி பதவி உயர்வு தொடர்பாகவும் கலந்துரையாடினார். அத்துடன் தளபதியவர்கள் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதி பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ விளையாட்டு பணிப்பக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அனுர சுதசிங்க இராணுவ மகளிர் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் அதுல சில்வா இலங்கை இராணுவ கரம் சங்கத்தின் தலைவரான பிரிகேடியர் ரஞ்சித் தர்மசிறி இராணுவ பரா கழகத்தின் செயலாளரான கேர்ணல் ராஜா குணசேகர மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

கீழ் காணப்படும் போட்டியாளர்கள் இராணுவத் தளபதியவர்களை இன்று காலை(25) சந்தித்தனர்.

2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச கரம் போட்டி - 3 (தொண்டர்) இலங்கை இராணுவ மகளிப் படையணி லான்ஸ் கோப்ரல் எம் டீ எஸ் ரணவீர வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

2018ஆம் ஆண்டிற்கான 13ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட போட்டி - 5 (தொண்டர்) இலங்கை இராணுவ மகளிப் படையணி லான்ஸ் கோப்ரல் டபிள்யூ என் ராஜபக்ச ரணவீர வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

2018ஆம் ஆண்டிற்கான ஆசிய பரா விளையாட்டு போட்டி (சக்கர நாற்காலி டெனிஸ்)– கஜபா படையணி கோப்ரல் ஆர் ஏ எல் எஸ் ரணவீர வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஆசிய பரா விளையாட்டு போட்டி – கஜபா படையணி கோப்ரல் சி என் புத்திக்க இந்திரபால (நீளம் பாய்தல்) தங்கப் பதக்கத்தையூம் (உயர் பாய்தலில்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

ஆசிய பரா விளையாட்டு போட்டி (சக்கர நாற்காலி டெனிஸ்) – இலங்கை பீரங்கிப் படையணியின் லான்ஸ் பொம்பொடியர் எஸ் டீ ஆர் தர்மசேன வெண்கலப் பதக்கத்தையூம் வென்றுள்ளார்.

ஆசிய பரா விளையாட்டு போட்டி (ஈட்டி எறிதல்) – 5ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் லான்ஸ் கோப்ரல் கே ஏ எஸ் துலான் 4ஆம் இடத்தை பெற்றார்.

ஆசிய பரா விளையாட்டு போட்டி –இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சாதாரண படைவீரர் டபிள்யூ+ அமில பிரசன்ன தங்கப் பதக்கத்தை (200மி) பெற்றார்.

ஆசிய பரா விளையாட்டு போட்டி –இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சாதாரண படைவீரர் எச் ஜி பாலித பண்டார வெள்ளிப் பதக்கத்தை (குண்டெறிதல் ) பெற்றார்.

ஆசிய பரா விளையாட்டு போட்டி –இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சாதாரண படைவீரர் ஆர் எஸ் கீர்த்தி பண்டார வெண்கலப் பதக்கத்தை (100மி ) பெற்றார்.

ஆசிய பரா விளையாட்டு போட்டி –இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் (ஆர் எப் டி) சாதாரண படைவீரர் கே டபிள்யூ எல் அஜித் 6ஆம் இடத்தை (ஈட்டி எறிதல் ) பெற்றார்.

ஆசிய பரா விளையாட்டு போட்டி –கஜபா படையணியின் (ஆர் எப் டி) ஆணைச்சீட்டு அதிகாரியான ஐ பி ஏ எல் புஷ்பகுமார வெண்கலப் பதக்கத்தை (உயரம் பாய்தல் ) பெற்றார்.

ஆசிய பரா விளையாட்டு போட்டி –கஜபா படையணியின் (ஆர் எப் டி) சார்ஜன்ட் எச் எம் டீ பி ஹேரத் தங்கப் பதக்கத்தை (ஈட்டி எறிதல் ) பெற்றார்.

ஆசிய பரா விளையாட்டு போட்டி –விஜயபாகு படையணியின் சார்ஜன்ட் எச் ஏ பி எஸ் ஹெட்டியாராச்சி வெள்ளிப் பதக்கத்தை (ஈட்டி எறிதல் ) பெற்றார்.

ஆசிய பரா விளையாட்டு போட்டி –இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கோப்ரல் எம் பி எம் இந்திக்க வெள்ளிப் பதக்கத்தை (நீளம் பாய்தல்) பெற்றார்.

ஆசிய பரா விளையாட்டு போட்டி –இலங்கை சிங்கப் படையணியின் கோப்ரல் ஏ ஜி யு இந்திக்க சூலதாஸ வெள்ளிப் பதக்கத்தை (100மி) தங்கப் பதக்கத்தை (200மி) பெற்றார்.Mysneakers | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD