Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th April 2018 18:01:51 Hours

இராணுவ பொதுநலவாய போட்டிகளில் வென்கலப் பதக்கம் வென்ற இராணுவ வீரர் இராணுவ தளபதியை சந்திப்பு

21ஆவது ஆசிய விளையாட்டுக்களில் இடம் பெற்ற ஆண்களுக்கான பளுதுாக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்று இலங்கை இராணுவத்தை பிரதிநிதிதுவப்படுத்தி போட்டியிட்ட 4ஆவது கொமாண்டோப் படையணின் கோப்ரல் ஜெ ஏ சி லக்மால் அவர்கள் (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமையன்று இராணுவ தளபதி லெப்டினென்ட ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களை சந்தித்தார்.

பொதுநலவாய போட்டிகளில் 56 கிலோ எடையில் பளுதுாக்கி வென்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கும் இராணுவத்திற்கும் கௌரவத்தை பெற்று கொடுத்த கோப்ரல் ஜெ ஏ சி லக்மால் அவர்களுக்கு இராணுவ தளபதியவர்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டார்.

இச் சந்திப்பில் இராணுவ தளபதியவர்களால் கோப்ரல் ஜெ ஏ சி லக்மால் அவர்களின் திறமைக்கு வழிகாட்டலாக இருந்த பயிற்றுவிப்பாளரான ஆனைச்சீட்டு அதிகாரியான எம்.ஜீ.என் பெணாந்து அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

வென்கலப் பதக்கம் வென்ற கோப்ரல் ஜெ ஏ சி லக்மால் அவர்களின் எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தப்பட்ட எடை தூக்கும் நிகழ்வுக்கும் மற்ற சர்வதேச மட்டத்தில் பதக்கம் பெற்றுக் கொள்வதற்கும் வசதிகளை செய்து இவரின் வெற்றியை இன்னும் எதிர்காலத்துக்கு கொண்டு செல்வதற்கு தேவையான திறமைகளை வழங்குவதற்கும் தளபதியை உறுதியளித்தார்.

இராணுவத்தின படையினர்களின் பளு தூக்குதல் உடற்கட்டமைப்பு கழகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் வஜீர பலிஹக்கார மற்றும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரூல்ப் நுஹேரா மற்றும் இராணுவத்தின் படையினர்களின் பளு தூக்குதல், உடற்கட்டமைப்பு கழகத்தின் துணை கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஜயன்த விஜேசுந்தர மற்றும் பயிற்றுப் விப்பாளரான ஆனைச்சீட்டு அதிகாரியான எம்.ஜீ.என் பொணாந்து அவர்களுக்கும் இச் சந்திப்பில் கலந்து கொண்டாரகள்.

Sports Shoes | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys