Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th May 2017 11:21:41 Hours

இராணுவ படைவீரர்கள் நில்வலா கங்கை நீர் மட்ட அனைக்கட்டு நிர்மானம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

நாடு பூராக ஏற்பட்டுள்ள சீர்கேடான காலநிலை நிமித்தம் ஏற்பட்ட பேரழிவு அனர்த்தங்களுக்கு கடந்த 48 மணித்தியாலங்களில் இராணுவத்தினர் பீ.டி.ஆர் ,பெகோ இயந்திரம் மற்றும் படகு சேவைகளை பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

மாத்தறை நயிம்பல் பிரதேசத்தில் நில்வலா கங்கை அனைக்கட்டு வெடிப்பு நீர் கசிவுத் தன்மையை தடுக்கும் நோக்கத்துடன் இராணுவத்தினர் மண் நிரப்பப்பட்ட பைகளையிட்டு அனைக்கட்டு வெடிப்பு பகுதிகளை சீராக்கினார்கள். மேலும் இந்த நடவடிக்கைகள் 28 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமாகி 29 ஆம் திகதி அதிகாலை வரை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பேரனர்த்த அழிவின் போது காலஞ்சென்ற நபர்களது சடலங்களை அவர்களது உறவினர்களுக்கு இராணுவ பீ.டி.ஆர் கவச வாகனங்களில் சென்று இராணுவத்தினர் கையளித்தார்கள்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது தலைமையில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 58 ஆவது படைப் பிரிவு தலைமையகம் மற்றும் கொமாண்டோ படையினர் உட்பட 1700 க்கு மேற்பட்ட இராணுவ படையினர்கள் நெலுவ, தவலம, நாஹொட, காலி கோட்டை, பத்தேகம, மொரவக, பிடபெத்தர, கபுறுபிடிய, அத்வெல்தொட, புளத்சிங்கள, களுத்தறை, தெஹியோவிட, முதுன்கொடுவ, இரத்தினபுரி, தொரனஹொட, எம்பிலிபிடிய, மாபிம, கஹடபிடிய, கடுவெல, ஒருஹொடவத்த, மீதொடமுல்ல, தளுகம, கொழும்பு, அஹலவத்த, மாத்தறை, அகுரெஸ்ஸ, மொரவக, தெனியாய, எகெலியகொட, பாஹியங்கல இகலவான, மில்லனிய, கஹவத்த, பெல்மடுல்ல நாதுரு கந்த , குகுலேகங்கை, கெலிங்கந்த, மொல்காவ, சீதுவ, தொம்பகொட உட்பட அனர்த்தங்களுக்கு உள்ளான பிரதேசங்களுக்கு மண் உள்ளடக்கப்பட்ட பைகளை இட்டு நீர் மட்டத்தை தடை செய்யும் நடவடிக்கைகளிளும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இணைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேன் பெரேரா , 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சுமித் அதபத்து, 14 ஆவது மற்றும் 53 ஆவது படைத் தளபதிகளினால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் , பிரதேச செயலகம், முப்படையினர், பொலிஸ், கிராம சேவகர் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த அனர்த்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இராணுவ மருத்துவ படையணியினரால் கலவான, புளத்சிங்கள, பாஹியங்கல, கஹதுவ, காலி பிரதேசங்களில் அனர்த்த பாதிப்புக்கு உள்ளான பிரதேச வாசிகளுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த மீட்பு பணிகள் இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 581,582 மற்றும் 583 ஆவது படைப்பிரிவு, 14 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 141 மற்றும் 142 ஆவது படைப்பிரிவு, 53 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 533 ஆவது படைப் பிரிவு, கொமாண்டோ படைப் பிரிவு, விஷேட படைப் பிரிவு, கவச வாகன படையணி, பொறியியிலாளர் படையணி, இலங்கை காலாட் படையணி, இலங்கை இராணுவ பொது சேவை படையணி, இலங்கை சமாதான நடவடிக்கை பயிற்சி பாடசாலை, 1ஆவது கவச வாகன படையணி, 6 ஆவது பீரங்கிப் படையணி, 5மற்றும் 12 ஆவது பொறியியலாளர் படையணி, 5 ஆவது சமிக்ஞை படையணி, 8 ஆவது இலங்கை காலாட் படையணி, 8 மற்றும் 12 ஆவது சிங்க படையணி, 5,6,8,9,16,3 ஆவது கெமுனு ஹேவா படையணி, 11 ஆவது விஜயபாகு காலாட்படையணி, இயந்திரவியல் காலாட்படையணி, இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி, 4 ஆவது பொறியியலாளர் சேவைப் படையணி, 1 ஆவது முன்னோடி படையணி, 10 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைய இராணுவ விநியோகம் மற்று போக்குவரத்து பணிப்பகத்தினால் மூன்று நாட்களாக தொடர்ந்து 2500 உணவுப் பொதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் அனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் 5 ஆவது சமிக்ஞை படையணியினரால் பேரழிவுக்கு உள்ளான பிரதேசத்தில் தொலைத் தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டன.

Nike Sneakers Store | AIR MAX PLUS