Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st October 2018 22:59:21 Hours

இராணுவ படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டிகள்

இராணுவ படையணிகளுக்கு இடையிலான 55 ஆவது தடவையாக இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான தடகள விளையாட்டு போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் (31) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த இறுதி நிகழ்விற்கு இராணுவ தடகள விளையாட்டு சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சுகத் பெரேரா அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்தார்.

இந்த போட்டிகளில் 24 இராணுவ படையணிகளிலிருந்து 900 வீரர், வீராங்கனைகள்கலந்து கொண்டனர். இந்த போட்டிகள் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக சுகததாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இராணுவ தடகள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச விளையாட்டு போட்டிகள், உச்சிநல விளையாட்டு, பாதுகாப்பு சேவை தடகள போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெ ளிக் காட்டி தங்கம், வெள்ளி, உலோக பதக்கத்தை பெற்று சாதனைகளையும் படைத்துள்ளனர்.

இந்த போட்டியில் பங்கு பற்றி வெற்றிகளை வெளிக்காட்டிய வீரர், வீராங்கனைகளுக்கு இராணுவ தளபதி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர சுதசிங்க மற்றும் இராணுவ தடகள விளையாட்டு சங்கத்தின் செயலாளர் பிரிகேடியர் சந்தன ரணவீர அவர்கள் இந்த இறுதி போட்டி நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்த போட்டிகளில் 2 தேசிய மட்டங்களையும், 12 புதிய மட்டங்களையும், 4 இராணுவ தடகள மட்டங்களையும் பெற்று படையினர் தங்களது பெயர்களையும் நிலை நாட்டியுள்ளனர். Authentic Nike Sneakers | Nike Shoes, Clothing & Accessories