Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd October 2018 20:53:00 Hours

இராணுவ தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ ஆசிர்வாத பூஜைகள்

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு பொரல்லையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் 'தேவாலயத்தில் (2) ஆம் திகதி மாலை இராணுவத்திற்கு ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.

இந்த பூஜை நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்களும் கலந்து கொண்டனர்.

தேவாலயத்தில் கிறிஸ்தவ ஆசிர்வாத பூஜைகள் கொழும்பு மறை மாவட்டத்தின் துணை ஆயரும், அருட் தந்தை அன்டனி ஜயக்கொடி அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹரீன் பெரேரா மற்றும் மேஜர் ஜெனரல் ரல்பா நுகேரா அவர்கள் இந்த பூஜைக்கு வருகை தந்த இராணுவ தளபதி மற்றும் அவரது பாரியார்களை வரவேற்றனர்.

இந்த பூஜையின் போது இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் செயலாளர் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டன.

பின்னர் இராணுவ கொடி மற்றும் படையணிகளின் கொடிகள் இராணுவ தளபதியின் பங்களிப்புடன் ஆசிர்வாத பூஜைகளும் இடம்பெற்றன. அதன் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.

இந்த பூஜையில் பொரல்ளை, பெப்டிஸ்ட் திருச்சபை, மெதடிஸ்ட் தேவாலயம் மற்றும் அங்கிலிகன் தேவாலயத்தின் பிதா மார்களும் கலந்து கொண்டனர்.

இந்த பூஜைகளில் இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து சிறப்பித்தனர். Sports Shoes | NIKE AIR HUARACHE