Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th January 2019 20:16:25 Hours

இராணுவ தளபதி ‘மிஹிந்து செத் மெதுரு’ மத்திய நிலையத்திற்கு விஜயம்

நாட்டிற்காக தங்களது அவயங்களை இழந்த விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களது நலன்புரி நிமித்தம் அத்திடியவில் அமைக்கப்பட்டுள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ மத்திய நிலையத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (8) ஆம் திகதி புதுவருடத்தின் பின் அங்குள்ள இராணுவ வீரர்களை பார்வையிடுவதற்கும் அவர்களுக்கு பரிசினை வழங்குவதற்காக விஜயத்தை மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த இராணுவ தளபதியை இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சாந்த திருநாவுக்கரசு அவர்கள் வரவேற்றார். பின்னர் ‘மிஹிந்து செத் மெதுர’ மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல ஜூவன் குணதிலக அவர்கள் இராணுவ தளபதியை அவயங்களை இழந்த படைவீரர்கள் இருக்கும் விடுதிகளுக்கு அழைத்து சென்றார்.

அங்கு சென்ற இராணுவ தளபதி இந்த படை வீரர்களுடன் சாதகமான முறையில் உறையாடலை மேற்கொண்டு அவர்களது சுகசெய்திகளை கேட்டு அங்குள்ள இராணுவ வீரர்களுக்கு புதுவருட பரிசுகளை வழங்கி அவர்களை வாழ்த்தினார்.

பின்னர் அங்குள்ள அவயங்களை இழந்த படை வீரர்களது பங்களிப்புடன் இராணுவ தளபதிக்கு வரவேற்பு நடனங்கள் மற்றும் பாடல்கள் முன்வைக்கப்பட்டது. இதனை இராணுவ தளபதி பார்த்து கேட்டு ரசித்தார். பின்னர் இராணுவ தளபதியினால் நடன குழுவிலுள்ள மூன்று படைவீரர்களுக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

மேலும் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் படை வீரனான கோப்ரல் ஏ. ஹலஹெதர அவர்களினால் வரையப்பட்ட சித்திர ஒவியமும் இராணுவ தளபதிக்கு நினைவு பரிசாக கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

பின்னர் இராணுவ தளபதி பிரமுகர்களின் வருகையிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் இராணுவ தளபதியின் வருகையையிட்டு கையொப்பமிட்டார்.

இந்த நிகழ்வில் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க, நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, போர்கருவி மாஸ்டர் ஜெனரல் ஜகத் குணவர்தன, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றி கொண்டனர்.affiliate tracking url | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ