Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2017 16:37:13 Hours

இராணுவ தளபதி தென்கொரியாவிற்கு விஜயம்

உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு செப்டம்பர் மாதம் 18 – 21ஆம் திகதி வரை சியோலியில் இடம்பெறவிருக்கும் இன்டோ ஆசிய பசுபிக்நாடுகளின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் தென்கொரியாவிற்கு 18ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.

நான்கு நாட்களைக் கொண்ட பசிபிக் இராணுவ தலைமை மாநாடு (பி.ஏ.சி.சி) (18) ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி “ஒற்றுமை முயற்சி இராணுவ பங்கீட்டிற்கான தரைப்படை நடவடிக்கைகள் அல்லாத பாரம்பரியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்” என்ற தலைப்பில் இடம்பெற்றது.

இந்த மாநாடுகளுக்கு 29 நாடுகளிலிருந்து இராணுவ மூத்ததளபதிகள் பங்கேற்றுக்கொள்வர். இந்த மகாநாடுக்கு தென்கொரிய இராணுவத் தளபதி கிம்யோங் - வூ மற்றும் அமெரிக்க மாநகரமான மார்க் ஏ. மில்லே அவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜக்கியநாடுகளின் செயலாளர் ஜெனரல் பான்கிமூன் முதல் நாள் பிரதான உரையை நிகழ்த்தினார்.

இந்த கருத்தரங்கு கலந்துரையாடல்களில் ஜெனரல் வின்சன்ட்கே. புருக்ஷ் சோய்யங்ஜின் தென்கொரியாவின் முன்னாள் துாதுவர் மற்றும் புருக்கிங் நிறுவனத்தின் மைக்கேல் ஓன்லான் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு பங்கேற்பாளர்களிடையே இருதரப்பு மற்றும் "இராணுவ இராஜதந்திரத்திற்கான" வாய்ப்பு தொடர்பாக ஆராயப்பட்டது மேலும் முக்கிய பாதுகாப்புப் பிரச்சினைகளில் பிராந்தியத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளிடையே உறவுகள் ஊக்குவிப்பதன் நோக்கமாக 1978 இல் தொடங்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தினரால் இப்படங்கள் (www.epu.eu) இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டமை.

bridgemedia | Sneaker & Lifestyle News