Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2017 09:14:54 Hours

இராணுவ தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தனது இராணுவ தளபதி பதவியிலிருந்து ஓய்வூ

இராணுவ தலைமையக இராணுவ தளபதி அலுவலகத்தில் இன்று (04)ஆம் திகதி காலை நடைபெற்ற 21ஆவது இராணுவ தளபதியான ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களினால் வாழ்த்துக்கள் கூறி புதிய இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இராணுவ தளபதி பதவியை உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்.

ஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவ தளபதியை புதிய இராணுவ தளபதி வரவேற்று இராணுவ தளபதி அலுவலகத்தில் அவர்களது கடமைகளை பாரம் கொடுத்ததுடன் புகைப்படங்களும் எடுக்கப்பட்டது. இந் நிகழ்வின் போது இராணுவ பதவி நிலை உத்தியோகத்தர்கள் , பணிப்பாளர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா 2015 பெப்ரவாரி மாதம் 22ஆம் திகதி 21ஆவது இராணுவ தளபதியாக பதவியை கடமையேற்றார். அவரது பதவி காலங்களில் ஏற்பட்ட தேசிய தேவைகள் மற்றும் அனர்த்தம் மற்றும் மீட்பு பணிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.

அதனைபோல் கொஸ்கம ஆயுத கிடங்கு வெடிப்பு மற்றும் மீதொட்டமுல்லை குப்பைமேடு , மண்சரிவு, அனர்த்தங்கள், டெங்கு ஒழிப்பு, வீடு நிர்மானிப்பு பணிகள் , மீள்குடியேற்றம் மற்றும் பல்வேறுபட்ட சமயம் , நலன்புரி திட்டங்களுக்கும் தலைமை வகித்தார்.

ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா இராணுவத்திலுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரியாவார். பல்வேறு மட்டங்களில் கட்டளை,பதவிநிலை மற்றும் ஆலோசகர் பதவிகளை வகித்தார். தற்பொழுது இவர் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியாக பதவி வகிக்கின்றார்.

trace affiliate link | adidas poccnr jumper dress pants size