Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th October 2018 21:35:19 Hours

இராணுவ தளபதி இராணுவத்தில் இணைந்த சமகால நண்பர்களுடன் சந்திப்பு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது இராணுவத்தில் இணைந்து சமகால நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான சந்திப்பு தியதலாவையில் உள்ள இராணுவ எகடமியில் (16) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.

இராணுவ எகடமிக்கு வருகை தந்த இராணுவ தளபதியை இராணுவ எகடமியின் கட்டளை தளபதி பிரிகேடியர் பிரியந்த சேனாரத்ன அவர்கள் வரவேற்று இராணுவ தளபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதைகளும் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து இராணுவ தளபதி சமகால நணபர்களுடன் ஒன்று கூடலில் இணைந்தார். இந்த நிகழ்வு இராணுவ எகடமியின் கட்டளைத் தளபதியின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த ஒன்று கூடலுக்கு அவருடைய இராணுவத்திலுள்ள அவர்களது சமகால நண்பர்கள் அனைவரும் இணைந்திருந்தனர். இலங்கை இராணுவ அதிகாரி இலக்கம் 16 இன் கீழ் இவர்கள் கெடட் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறினர்.

இவர்களது சமகால நண்பர்கள் இராணுவ தளபதியின் இந்த வளர்ச்சியை இந்த சந்திப்பின் போது பெருமையாக எண்ணினார்கள். அத்துடன் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் வி.என் கொஸ்வத்த அவர்கள் இவர்களது கடந்த கால நினைவுகளை இந்த சந்திப்பின் போது விளக்கி உரை நிகழ்த்தினார்.

இவர்களது கெடற் பயிற்சியின் போது பயிற்சி அதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற கேர்ணல் டப்ள்யூ.ஏ பமுனுவ அவர்களைப் பற்றி இராணுவ தளபதி அச்சமயத்தில் நினைவு கூறினார். மேலும் இராணுவ தளபதி அவர்கள் எமது இந்த வளர்ச்சிக்கு எமக்கு வழிக்காட்டியாக இருந்த அனைத்து அதிகாரிகளையும் நினைவு படுத்தினார்.

இந்த ஒன்று கூடலின் போல் கேர்ணல் அஜித் விக்ரமசேகர அவர்களினால் ‘கொபி டேபல் ‘ எனும் பெயரில் சித்திரக் கதை புத்தகமொன்றும் வெளியிடப்பட்டது.

இந்த ஒன்று கூடல் இலங்கை இராணுவத்தில் 1981 ஆம் ஆண்டு 16 ஆம் திகதி கெடற் பயிற்சிக்கு உள் புகுத்தப்பட்ட இராணுவ அதிகாரி 16 ஆம் இலக்கத்தை கொண்ட கெடற் அதிகாரிகளது சமகால நண்பர்களது ஒன்று கூடலாக அமைந்திருந்தது.

இந்த நிகழ்விற்கு இராணுவ தளபதியின் பாரியார் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்களும் கலந்து கொண்டார். அன்றைய தின இரவு விருந்தோம்பல் நிகழ்வும் இடம்பெற்றன.

இதன்போது ஓய்வு பெற்ற அதிகாரிகளான மேஜர் ஜெனரல் கே.ஜே அல்விஸ், மேஜர் ஜெனரல் வி.என் கொஸ்வத்த, கெப்டன் கே.ஏ.எஸ் சிறிவர்தன, கேர்ணல் எச்.கே சந்திரசேன, லெப்டினன்ட் கேர்ணல் ஏ பிரேமசந்திர, பயிற்சி அதிகாரி கேர்ணல் டப்ள்யூ.ஏ பமுனுவ, லெப்டினன்ட் கேர்ணல் டொனி வீரபங்ஷ, பயிற்சி அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் வால்டர் மன்னம்பேரி, பயிற்சி சாஜன் கெப்டன் தாஜூடீன் அவர்கள் இணைந்திருந்தனர். Best Authentic Sneakers | Nike News