Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st May 2018 17:57:53 Hours

இராணுவ அதிகாரி தொழில் வளர்ச்சி மையத்தில் கருத்தரங்குகள்

புத்தளையில் அமைந்துள்ள இராணுவ அதிகாரி தொழில் வளர்ச்சி மையத்தில் அமர்வுகள் மோதல்கள் பகுப்பாய்வு இயக்கவியல் ஆராய்தல் போன்ற கருத்தரங்குகள் வியாழக் கிழமை (31) ஆம் திகதி காலை இடம்பெற்றன.

இந்த கருத்தரங்கிற்கு பிரதம அதிதிகளாக இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் அத்மிரால் ரவீந்திர சி விஜயகுணரத்ன அவர்கள் வருகை தந்தனர்.

பின்பு மங்கள விளக்கேற்றுகள் ஏற்றி இராணுவ சம்பிரதாய முறைப்படி இந்த கருத்தரங்குகள் ஆரம்பமானது. இந்த கருத்தரங்கில் பிரிகேடியர் சந்தன குணவர்தன அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

'பனிப்போர் முடிந்த பிறகு உலக ஒழுங்கின் பரிணாமம்' என்ற தலைப்பில் விரிவுரைகளை பேராசிரியர் ஹரிந்த விதானகே அவர்களும், 'பிரதான சக்திகளின் மூலோபாய அபிலாஷைகளும் ஆசிய பசிபிக் எவ்வாறு ஒருமுகப்படுத்தப்பட்ட மற்றும் முரண்பாடான நலன்களின் மையமாக மாறும்' எனும் தலைப்பில் விரிவுரைகளை கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சித்தார பெர்ணாண்டோ அவர்கள் நிகழ்த்தினார்கள்.

இரண்டாவது அமர்வுகள் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

முதல் பேச்சாளர் அசந்த செனெவிரத்ன அவர்களால் 'ஜியோபொலிடிக்ஸ், பெரிய உத்திகள் மற்றும் தென் ஆசியாவில் சிறிய நாடுகளின் பாதுகாப்பு கவலைகள்'. போன்ற விரிவுரைகளும், இரண்டாவது பேச்சாளரான சனத் டீ சில்வா அவர்களினால் 'தெற்காசியாவில் அணு சிக்கல்கள்.' போன்ற விரிவுரைகள் ஆற்றப்பட்டன.

இந்த கருத்தரங்கில் குழு உறுப்பினர்களின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து அமர்வுகளும் ஊடாடும் கேள்வி மற்றும் பதில் அமர்வுகள் பின்பற்றப்பட்டன.

இராணுவ அதிகாரி தொழில் வளர்ச்சி மையத்தில் கருத்தரங்கிற்கு பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ், இராணுவ பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் தனஞ்ஜித் கருணாரத்ன , இராணுவ செயலகத்தின் மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க, 60 இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்குகள் இரண்டு நாட்களாக இடம்பெற்றன.

Asics footwear | adidas Yeezy Boost 350