Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2018 14:32:31 Hours

இயற்கை அனர்த்த பணிகளில் இராணுவத்தினர் ஈடுபாடு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கு அமைய 48 மணித்தியாலயம் தொடர்ச்சியாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த பணிகளுக்காக 100 இராணுவத்தினர்களை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை (21) ஆம் திகதி மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்தரை,மெதரவக, கம்புறுபிடிய ,நெலுவ, தவலம, பிடிகல பலிந்தனுவர மற்றும் புளத்சிங்கள மழைப் பிரதேசங்களில் அனர்த்த பணிகளில் ஈடுபட்டனர்.

3 டப்ள்யூஎம்இசெட் போட்டுகள் இந்த பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இராணுவ தளபதியின் பணிப்புரையின் கீழ் இயற்கை அனர்த்த மத்திய நிலையம் மற்றும் பிரதேச செயலாளர் காரியாலயத்தின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினர் இந்த அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அனர்த்த பணிகள் இராணுவ நடவடிக்கை பணியகத்தின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்று கொண்டிருக்கின்றன.

latest Nike release | adidas Yeezy Boost 350