Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st September 2018 23:18:11 Hours

இயந்திரவியல் காலாட் படையணித் தளபதியவர்களின் பிரியாவிடை

இயந்திரவியல் காலாட் படையணித் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் பிரியாவிடை நிகழ்வானது கடந்த சனிக் கிழமை (01) இராணுவ மரியாதைகளுடன் இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இவ்வாறு விடைபெற்று செல்லும் இவ் அதிகாரியவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அழிக்கப்பட்டதோடு பிரிகேடியர் சுமித் அதபத்து உள்ளடங்களான உயர் அதிகாரிகள் குழாமும் இவ் அதிகாரிக்கான பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அத்துடன் இயந்திரவியல் காலாட் படையணியினரால் மற்றும் காலாட் படையணி வாகனங்களால் தகுந்த மதியாதையும் இவ் அதிகாரியவர்களுக்கு அணிவகுப்பு மைதானத்தில் இடம் பெற்றது.

இவ்வணிவகுப்பு மதியாதையைத் தொடர்ந்து இவ்வியந்திரவியல் காலாட்படையினரால் வரவேற்கப்பட்டததோடு இவ்வதிகாரியவர்களால் பிரியாவிடையின் போது பிரியாவிடைக்கான காகிதத்திலும் கையொப்பமிட்டார்.

அத்துடன் இப் பிரியாவிடை நிகழ்வின் போது மதியபோசன விருந்துபசாரம் இடம் பெற்றதோடு இயந்திரவியல் காலாட் படையணியின் சேவா வணிதா பிரிவின் தலைவியான திருமதி ஷிரோணி மசகோரல அவர்களும் கலந்து கொண்டார். அத்துடன் பாரிய அளவிலான அதிகாரிகள் மற்றும் இவ்வதிகாரியவர்களின் பாரியாரும் இப் பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டார்.

அத்துடன் விடைபெற்றுச் செல்லும் ஜெனரல் குமுது பெரேரா அவர்களுக்கு இராணுவ ஊடக பணிப்பகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

சில நிமிடங்களின் பின்னர் இவ்வாறு விடை பெற்று செல்லும் அதிகாரியவர்களுக்கு அதிகாரிகள் மெஸ்ஸில் பிரியாவிடைக்கான தேநீர் விருந்துபசாரமும் WMZ 551 B கவச வாகனத்திலான அணிவகுப்பு மரியாதையும் படையினரால் ஜயஸ்ரீ வாழ்த்துக்களுடன் நிறைவுற்றது. Nike shoes | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals