Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th May 2018 07:46:52 Hours

இந்தியா இராணுவ பிரதானி இலங்கை இராணுவ எகடமிக்கு விஜயம்

இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் (16) ஆம் திகதி காலை தியதலாவையில் அமைந்துள்ள இராணுவ எகடமிக்கு விஜயத்தை மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த இந்திய இராணுவ பிரதானியை இராணுவ எகடமியின் கட்டளை தளபதி பிரிகேடியர் பிரியந்த சேனாரத்ன அவர்கள் வரவேற்றார்.

பின்பு இராணுவ எகடமியில் உள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று மலரஞ்சலிகளை செலுத்தி கௌரவத்தை செலுத்தினார். அதனை தொடர்ந்து இராணுவ எகடமியின் வரலாறு மற்றும் விதி முறைகள் தொடர்பாக கெடெட் கட்டளை அதிகாரி கேர்ணல் அஜித் விக்ரமசேகர அவர்கள் தெளிவூட்டலை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் இராணுவ எகடமியில் உள்ள இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

Best Nike Sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%