Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th May 2018 18:27:34 Hours

இந்திய இராணுவ பதவி நிலை பிரதாணி இரு தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கைகளுக்கு இலங்கை வருகை

இந்தியா மற்றும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கைகளை மேலும் கொண்டு செல்வதற்காக இரு நாடுகளின் முக்கியத்துவம் பற்றி கலந்துறையாடுதலின் நிமித்தம் இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் அழைப்பை ஏற்று இந்திய இராணுவ பதவி நிலை பிரதாணி ஜெனரல் பிபின் ராவத் (General Bipin Rawat) அவர்கள் இலங்கையில் ஏழு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தின் காரணமாக (13) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இலங்கைக்கு வருகை தந்தார்.

ஆதனைத் தொடர்ந்து இவரை கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சம்பிரதாயத்தின் முறைப்படி வரவேற்கப்பட்ன.

கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக மற்றும் இலங்கை இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியுமான சந்திரிக்கா சேனநாயக அவர்களினால் இந்திய இராணுவ பதவி நிலை பிரதாணி ஜெனரல் பிபின் ராவத் (General Bipin Rawat) மற்றும் மதுலிகா ராவத் அம்மணி (Mrs Madhulika Rawat) அவர்களையும் மிக மகழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவில் ஜெனரல் பிபின் ராவத் (General Bipin Rawat), துணைவியர் மதுலிகா ராவத் (Mrs Madhulika Rawat), மேஜர் ஜெனரல் பிரிதி சிங் (Major General Prithi Singh), பிரிகேடியர் முகேஷ் அகர்வால் (Brigadier Mukesh Aggarwal) மற்றும் மேஜர் அன்ஷூல் அகலவத் (Major Anshul Ahlawat) ஆகயோரும் வருகை தந்தனர்.

ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க இந்திய உயர் ஆணைக்குழுவின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராம் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்திய இராணுவ பதவி நிலை பிரதாணி அவர்களை விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.

இந்த பிரதிநிதிகள் இலங்கை விஜயத்தின் நிமித்தம் அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர். பாதுகாப்பு செயலாளர், அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்பு பதவி நிலை பிரதாணி முப்படைத் தளபதிகள் அனைவரும் பத்தரமுல்லையின் உள்ள இந்திய அமைதி பாதுகாப்பு படை நினைவ துாபிக்கு (Indian Peace Keeping Force) மலர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தியத்தலாவையில் அமைந்திருக்கும் இலங்கை இராணுவ தொழிநுட்ப பயிற்ச்சி நிலையம் மற்றும் திருக்கோணமலை காலி போன்ற பிரதேசங்களையும் பார்வையிட்டவுள்ளனர்.

இந்த வியத்தின் போது இந்திய இராணுவ பதவி நிலை பிரதாணி அவர்களின் துணைவியாரன திருமதி மதுலிகா ராவத் அவர்களை மாரியாதையுடன் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சந்திரிக்கா சேனநாயக மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் அங்கத்வர்களால் நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக மற்றொரு வரவேற்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆத்துடன் இலங்கையின் இந்தியா உயர் ஆணைக்குழுவின் மதிப்புக்குறிய தரஞ்ஜன் சிங் சந்து (His Excellency Mr. Taranjit Singh Sandhu), அவர்களினால், இராணுவ பிரதி பதிவி நிலை பிரதாணியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் பல இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளுடன் கொழும்பில் அமைந்தருக்கும் தாஜ் சமூத்திரா ஹேட்டல் (Taj Samudra Hotel) வளாகத்தில் வைத்து வரவேற்றனர்.

Sports News | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp