Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th August 2017 22:33:58 Hours

இந்திய இராணுவ தெற்கு தளபதி இராணுவ தளபதியை சந்திப்பு

இந்திய இராணுவ தெற்கு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எம் ஹரிஸ் பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் எஸ்எம் விஎஸ்எம் ஏடீசி இலங்கைக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்றைய தினம் (17)ஆம் திகதி காலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை உத்தியோகபூர்வமாக இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்திய தளபதியை இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர வரவேற்றார். பின்பு இராணுவ தளபதியின் பணிமனைக்கு இவர் அழைத்துச் சென்று இந்திய தளபதி மற்றும் இராணுவ தளபதிக்கு இடையில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்திய இராணுவ தெற்கு தளபதி மேலும் கருத்து தெரிவிக்கையில் இந்திய இராணுவத்தினர் இலங்கை இராணுவ கொமாண்டோ, விஷேட படையணி , பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லுாரி, காலாட்படை பயிற்சி முகாம்களில் பயிற்சிகளை பெறுவதற்கும் கடந்த காலங்களில் பெற்ற யுத்த ரீதியான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இராணுவ தளபதி கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தின் பொறிமுறை காலாட்படைக்கு இந்திய இராணுவத்தினால் வழங்கப்பட்ட பயிற்சி ஒத்துழைப்புக்கும் இந்திய இராணுவத்தினால் இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினருக்கும் வழங்கும் பயிற்சிகள் தொடர்பாக தனது நன்றியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.

இந்த இலங்கைக்கான விஜயத்தின் போது இராணுவ தளபதியை சந்திப்பதற்காக இந்திய இராணுவ தெற்கு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எம். ஹரிஸ், மேஜர் ஜெனரல் வி.கே சிங் விஎஸ்எம் எம்ஜிஜிஎஸ் (நடவடிக்கை), இந்திய தெற்கு கட்டளை அதிகாரி கேர்ணல் எஸ் ஹவூஷல், இராணுவ தலைமையகத்திற்கு வருகையை மேற்கொண்டனர்.

இந்திய இராணுவ தெற்கு தளபதி இந்த விஜயத்தின் போது இராணுவ தலைமையகத்தில் பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் தனது வருகையையிட்டு கையொப்பமிட்டார். அதன் பின்பு இந்திய தளபதி (17)ஆம் திகதி பகல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படையினர்களின் நினைவு துாபிக்கு சென்று அஞ்சலியை செலுத்தினார்.

இங்கு வருகை தந்த இந்திய இராணுவ மூத்த அதிகாரிகளுடன் அவர்களது பாரியார்களும் வருகை தந்துள்ளனர்.

இந்திய இராணுவ தெற்கு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி எம் ஹரிஸ் இந்திய தமிழகத்தின் அமராவதிநாகர் சைனிக் பள்ளியில் கல்வி பயின்றார். மேலும் பூனே சிவில் தேசிய பாதுகாப்பு எகடமியில் முன்னாள் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

இந்திய தெற்கு தளபதி 1978ஆம் ஆண்டு இந்திய இராணுவ எகடமியில் அடிப்படை பயிற்சி முடிவின் பின்பு 16ஆவது மஹார் பொறிமுறை காலாட்படையணிக்கு நியமிக்கப்பட்டு பின்னர் 19ஆவது பொறிமுறை காலாட்படையணியின்( புனரமைப்பு மற்றும் ஆதரவு) படையணிக்கு கட்டளை வகித்தார். பின்பு இராணுவ படிப்புக்களுக்காக காம்பெர்லி (இங்கிலாந்து) மியூவோவின் உயர் கட்டட பாடநெறி மற்றும் தில்லி தேசிய பாதுகாப்பு கல்லுாரியில் தனது பாதுகாப்பு தொடர்பான கல்விகளை மேற்கொண்டார்.

இந்திய தெற்கு தளபதி ஜெனரல் கட்டளை அதிகாரியாகவும், காலாட்படை பயிற்சி பாடசாலையில் பயிற்றுவிப்பாளராகவும், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லுாரியில் பயிற்றுவிப்பாளராகவும், படைப் பிரிவு மற்றும் துணை பகுதிகளுக்கு கட்டளை அதிகாரியாகவும், டில்லி ஒருங்கிணைந்த தலைமையகத்திலும் கடமை புரிந்துள்ளார். மேலும் பரம விஷ்சித் சேவா பதக்கம் (பி.வி.எம்.எஸ்), ஏடி விசிஷ்ட சேவா பதக்கம், சேனா பதக்கம் (எஸ்எம்) மற்றும் விஷ்சித் சேவா பதக்கம் (வி.எஸ்.எம்) இவர் செய்த சேவையை கௌரவித்து இந்த பதக்கங்கள் இந்திய இராணுவத்திகால் வழங்கப்பட்டது.

Adidas footwear | Archives des Sneakers