Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th June 2018 17:11:53 Hours

அவயங்களை இழந்த இராணுவ வீரருக்கு வீடு கையளிப்பு

புதுக்குடியிருப்பு விஸ்வமடு பிரதேசத்தில் எல்டிடிஈ பயங்கரவாத தாக்குதலின் போது நாட்டிற்காக அவயங்களை இழந்த கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் டப்ள்யூ.கே.எஸ் லக்மால் அவர்களுக்கு பொரல்லுஹொட அதுருகிரிய பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரண்டு மாடி வீடொன்று (6) ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாவிந்திர சில்வா அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து பௌத்த தேரர் அவர்களின் மத ஆசிர்வாதத்துடன் மங்கள விளக்கேற்றி இந்த படை வீரருக்கு இந்த வீடு கையளிக்கப்பட்டது.

இந்த வீடு 2.7 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டது. இதற்கு ‘அனோட்ஸ் கொகோவா’ கம்பனியின் தலைவர் திரு. டீ.எல் வீரசூரிய அவர்களின் அனுசரனையுடன் 12 ஆவது கஜபா படையணியின் ஒத்துழைப்புடன் இந்த கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அச்சமயத்தில் வீடு கையளிப்பதற்கு வருகை தந்த இராணுவ தளபதி இந்த படை விரரின் மனைவி மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகளுடன் சுமூகமான முறையில் சுகங்களை கேட்டு உரையாடினார்.

இந் நிகழ்வில் இராணுவ தளபதி, கஜபா படையணியின் படைத் தளபதி, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ‘அனோட்ஸ் கொகோவா’ கம்பனியின் தலைவர் திரு. டீ.எல் வீரசூரிய மற்றும் அவரது பாரியாரான திருமதி நந்தனி வீரசூரிய அவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக, கேர்ணல் ஹரிந்திர பீரிஸ மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் அவர்கள் திருமதி நந்தனி வீரசூரிய அவர்களது சகோதரர் ஆவார்.

இவரது இந்த வீடு 2016 ஆம் ஆண்டு 11 ஆம் திகதி ஓகஸ்ட் மாதம் கட்டிட நிர்மான பணிகள் ஆரம்பமாகி நேற்றைய தினம் இந்த வீடு இவருக்கு பாரமளிக்கப்பட்டது

jordan release date | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp