Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2017 09:09:13 Hours

அம்பாறையில் இடம் பெற்ற விசேட நத்தார் பண்டிகை நிகழ்வுகள்

கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 24 ஆவது படைத்தலைமையகத்தினரின் ஒழுங்கமைப்பில் இராண்டாவது தடவையாக மிகவும் சிறப்பாக நத்தார் கரோல் கீதங்கள் வியாழக்கிழமை (21)ஆம் திகதி அம்பாறை எச்.எம் வீரசிங்க விளையாட்டு மைதானத்தில இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து 24ஆவது படைப்பிரிவின் படை அதிகாரி மேஜர் ஜெனரால் எல்.எம் முதலிகே அவர்களில் முழுமையான ஒத்துழைப்புடனும் அம்பாறை செயின் இக்னேடியன் தேவாலயத்தின் புனித கத்தோலிக்க போதகரால் மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரால் சன்துசித பனான்வல அவர்கள் பிரதான விருந்தினராக கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கல்முனை சூரி தேவாலயத்தின் போதகர் திருசெல்வம் அவர்களினால் கிரிஸ்தவ சமய பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.

போதகர் ரோஹான் வசன்த அவர்கள் நத்தார் பண்டிகையின சிறப்பு; உண்மையான முக்கியத்துவம் பற்றி விளக்கினார்

அம்பாறை தேவாலயம், மற்றும் இகினியாகல தேவாலயம், கல்முனை சூரிய தேவாலயம், போன்ற இடங்களில் இராணுவத்தினரால் நத்தார் கரோல் கீதங்களும் இடம் பெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் அரசாங்க அதிபர் துசித பீ வனிகசிங்க அவர்களும் விசேட அதிதியாக கலந்த கொண்டார்.

பிரதேசத்தின் சிவில் சமுகம் மற்றும் வணிக சமுகமும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கினர்;

கிழக்கு மாகணத்தின் சிரேஸ்ட பொலிஸ் உயர் அதிகாரி கபில ஜயசேகர் மற்றும் 23ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பி.வீ.டி.பிஅபேனாயக்க மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள்மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Best Nike Sneakers | Nike for Men