Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th February 2018 19:36:07 Hours

அனர்த்த சேவையில் ஈடுபட்ட இராணுவ அங்கத்தவர்களை கௌரவித்து பாராட்டு நிகழ்வு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, பிரதி பதவி நிலை பிரதானி தம்பத் பெர்ணாந்து போன்ற உயரதிகாரிகளினால் கடந்த வருடங்களின் போது இயற்கை அணர்த்தங்கள் போது சேவையில் ஈடுபட்ட இராணுவ அங்கத்தவர்கள் 60 பேரை கௌரவித்து பாராட்டு நிகழ்வு (12) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய 2016 – 2017 ஆம் ஆண்டுகளில் இயற்கை அனர்த்தங்களின் போது சேவையில் ஈடுபட்ட இராணுவத்தினரை கௌரவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் முதல் கட்டமாக இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு இராணுவ இராணுவ தளபதி ,தொண்டர் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன, இராணுவ தலைமையகத்தின் இராணுவ சேவை செயலாளர் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர, இராணுவ நிறைவேற்று பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ காலாட் பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சாலி கால்லகே, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ், இராணுவ ஆளனி நிருவாக பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் தேவிந்ர பெரேரா போன்ற அதிகாரிகள் இந்த சேவைகளை வழங்கிய இராணுவ அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

இந்த நிகழ்வுகள் இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவ ஆளனி பணியகத்தின் முழுமையான ஏற்பாட்டுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

மீரியபெத்த, அரணநாயக, தெரணியகல, புளத்கொகுபிடிய, இலுக்வத்த போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவுகள் கொழும்பு, இரத்தினபுரி, மதுகம போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட வௌளப் பெருக்குகள் பாணந்துறை, மினுவன்ஹொட மற்றும் கடான ஆதி பிரதேசங்களில் ஏற்பட்ட சூறாவளி கொஸ்கம மற்றும் மீதொட்டமுல்லை பிரதேசங்களில் குப்பைமேட்டு சரிவு அழிவுகளின் போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட இராணுவத்தினரது சேவையை கௌரவித்து இந்த நான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

மேலும் இந்த நிகழ்வின் போது இம்முறை இடம்பெற்ற சுதந்திர தினத்தின் போது சிறந்த இராணுவ அணிவகுப்பு மரியாதையை வழங்கிய இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் இராணுவ அங்கத்தவர்களுக்கு அவர்களது திறமையை கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Asics shoes | Ανδρικά Nike