Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2017 10:27:00 Hours

9ஆவது ஆரம்ப நினைவாண்டைக் கொண்டாடிய 64ஆவது படைத் தலைமையகம்

முல்லைத் தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64ஆவது படைத் தலைமையகமானது தமது படைப் பிரிவின் 9ஆவது ஆரம்ப நினைவாண்டுப் பூர்த்தியை முன்னிட்டு பலவாறான நிகழ்ச்சிகளை கடந்த சனிக் கிழமை (16) ஏற்பாடு செய்திருந்தது.

அந்த வகையில் இந் நிகழ்விற்கு வருகை தந்த 64ஆவது படைத் தலைமையக கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜயந்த ஜயவீர அவர்களை இப் படைத் தலைமையகப் படையினர் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றனர். அதன் பிற்பாடு இப் படைத் தலைமையக தளபதியவர்களால் நாக மரக் கன்றும் இப் படைத் தலைமைய வளாகத்தில் நடப்பட்டது.

இதன் போது உரையாற்றிய இப் படைக் கட்டளைத் தளபதியவர்கள் எதிர் வரும் ஆண்டிற்கான நல்லிணக்கத்தை முன்னெடுக்கின்ற செயற்திட்டங்கள் போன்றவற்றை விளக்கிக் கூறினார்.

இதன் போது கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளும் இப் படைக் கட்டளை அதிகாpரயவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றதுடன் 23ஆவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 26ஆவது கஜபா காலாட் படையணி போன்றவை போட்டியிட்டதுடன் அதில் விஜயபாகு காலாட் படையணி வெற்றிக் கிண்ணத்தை சூடிக் கொண்டது.

இப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களை அன்றய தினமே மாலை வேளை 64ஆவது படைத் தலைமையக கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜயந்த ஜயவீர அவர்கள் வழங்கினார்.

இந் நிகழ்வின் இறுதியில் அனைத்துப் படையினருக்கும் பொதுவான மதிய விருந்துபசாரம் இப் படைத் தலைமையத்தில் இடம் பெற்றது.

best Running shoes brand | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov