Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th January 2020 17:36:35 Hours

68 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

முல்லைத்தீவு கோம்பாவில் பிரதேசத்தில் உள்ள 68ஆவது படைத் தலைமையகத்தின் புதிய 9ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் ஆர் எம் பி ஜே ரத்நாயக்க அவர்கள் திங்கட் கிழமை (06) கடமைப் பொறுப்பேற்றார்.

இதன் போது இப் புதிய தளபதியவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் இவ் அதிகாரியவர்கள் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு தமது கடமைப் பொறுப்பேற்றார்.

அதன் பின்னர் மேஜர் ஜெனரல் ரத்நாயக்க அவர்கள் இப் படைத் தலைமையகத்தில் சந்தன மரக் கன்றை நட்டார். சில நிமிடங்களின் பின்னர் இவர் இத் தலைமயக படையினருக்கான உரையாற்றினார்.

இந் நிகழ்வில் படைத் தலைமையகங்கள் மற்றும் படைப் பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். Asics footwear | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ