Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st June 2019 13:26:34 Hours

663 ஆவது காலாட் படைத் தலைமையகத்திற்கு புதிய படைத் தளபதி நியமிப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகம் மற்றும் 66 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 663 ஆவது படைத் தலைமையகத்தின் 8 ஆவது புதிய படைத் தளபதியாக கேர்ணல் சுபாஷன் லியனகம அவர்கள் இம் மாதம் (19) ஆம் திகதி பூநகிரி ஜயபுரம் பிரதேசத்திலுள்ள படைத் தலைமையகத்தில் தனது பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

புதிய படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு படைத் தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டார். பின்னர் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது பதவியை கையொப்பமிட்டு பாரமேற்றார்.

அன்றைய தினம் படைத் தலைமையக வளாகத்தினுள் மாமர நடுகையும் படைத் தளபதியினால் மேற்கொள்ளப்பட்டு பின்னர் படையினர் மத்தியில் சிறப்புரையையும் இவர் ஆற்றினார்.

இதற்கு முன்பிருந்த படைத் தளபதியான கேர்ணல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் வெளிநாட்டு பயிற்சி நிமித்தம் சென்றதால் அந்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டார்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் 15 ஆவது பீரங்கிப் படையணி மற்றும் 2 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரிகள் 663 ஆவது படைத் தலைமையகத்தின் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.latest Running Sneakers | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret