Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2018 17:08:04 Hours

66ஆவது படைப் பிரிவினரால் சர்வதேச வனரோப திட்டத்திற்கான பங்களிப்பு

இராணுவத்தினரின் மற்றுமோர் திட்டமான ரணவிரு ஹரித அரண திட்டமானது தற்போது இயங்கி வருகின்ற வனரோப எனும் சர்வதேச மரநடுகைத் திட்டமானது மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களின் ஒருங்கிணைப்போடு முன்னெடுக்கப்படுகின்ற ஹரித்த கம்மானய எனும் திட்டமானது கடந்த வெள்ளிக் கிழமை (12) பூனெரின் பிரதேசத்தில் உள்ள 66ஆவது படைப் பிரிவினரால் 1500 கும்புக் மரக் கன்றுகள் 30 கிமீ துார அளவில் நலன்கட்டியிலிருந்து பரந்தன் வீதி ஓரங்களில் (B357) நடப்பட்டன.

அந்த வகையில் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட இவ் வனரோப எனும் சர்வதேச மரநடுகைத் திட்டமானது கிளிநொச்சிப் பாதுகாப்புப் படையின் 66ஆவது படைத் தலைமையத் தளபதியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலன அவர்களது தலைமையில் இவ்வாறான 1500 கும்புக் மரக் கன்றுகள் நடப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 66ஆவது படைத் தலைமையத் தளபதியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பூனெரின் பிரதேச செயலாளர் பூனெரின் பிரதேசத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீதி அபிவிருத்தி ஆணையகத்தின் அதிகாரிகள் வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் 66ஆவது படைத் தலைமையத்தின் இராணுவ உயர் அதிகாரிகள் ஸ்ரீ விக்ணேஷ்வரா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

அதேவேளை கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண அவர்களின் வழிகாட்டலின் கீழ் 66 படைத் தலைமையகமானது இவ்வாறன கும்புக் மரக் கன்றுகளை பூனெரின்பிரதேச பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தது.

இவ்வாறான மரக் கன்றுகள் வீதி அபிவிருத்தி ஆணையகம் வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை மின்சார சபையின் அனுமதியோடு இத் திட்டத்திற்கான வழங்கப்பட்டது.

best Running shoes | nike