Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2019 12:05:28 Hours

65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக சேவைப் பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 652, 653 ஆவது படைத் தலைமையகங்களின் ஏற்பாட்டில் சமூக சேவைப் பணிகள் ஜனவாரி 7 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

அக்கரயான்குளம் முன்பள்ளி வளாகத்தினுள் 652 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் அய்யனான்குளம் பாடசாலை வளாகத்தினுள் 653 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 21 ஆவது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் 70 படை வீரர்கள் பங்கு பற்றிக் கொண்டனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களது தலைமையில் இந்த பணிகள் இடம்பெற்றது.Buy Sneakers | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!