Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2018 19:15:36 Hours

64 மற்றும் 68 ஆவது படைப் பிரிவின் ஆண்டு பூர்த்தி நிகழ்வு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 மற்றும் 68 ஆவது படைப் பிரிவின் 9 ஆவது, 10 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றது.

64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களுக்கு 10 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வினையிட்டு படைப் பிரிவு தலைமையகத்தினுள் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து சமய தளங்களிலும் ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றது.

அன்றைய தினமே (9) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை படைப் பிரிவு தலைமையக வளாகத்தினுள் படைத் தளபதியினால் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர் படைப் பிரிவி தலைமையகயத்தில் உள்ள அனைவரது பங்களிப்புடன் பகல் விருந்தோம்பல் நிகழ்வு இடம்பெற்றது.

டிசம்பர் மாதம் (10) ஆம் திகதி 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்களுக்கு 9 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

அன்றைய தினம் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீர ர்களை நினைவு கூர்ந்து நிகழ்வொன்றும், படைப் பிரிவு தலைமையகத்தினுள் அனைத்து படை வீரர்களது பங்களிப்புடன் விருந்தோம்பல் நிகழ்வு இடம்பெற்றது.bridgemedia | Nike SB