Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th November 2018 10:58:45 Hours

59ஆவது மற்றும் 64 படைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய வெள்ளநீர் தடுப்பு பணிகள்

சில தினங்களுக்கு முன்னர் முல்லைத் தீவுப் பிரதேசத்தில் குமலமுனை கிராம சேவகர் பிரிவில் காணப்படும் நெத்திக்கை குளக்கட்டின் திருத்த வேலைப்பாடுகுளுக்காகவும் அதன் நீர் மட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும் 5ஆவது இலங்கை சிங்கப் படையணியின் 40 படையினரால் 5000ற்கும் மேற்பட்ட மணல் மூடைகள் நீர்பாசன பொறியியலாள அதிகாரிகளின் ஒருங்கிணைப்போடு இடப்பட்டன.

அந்த வகையில் முதியன்கட்டு நீர்பாசன பொறியியல் அதிகாரிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க முல்லைத் தீவூ பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59ஆவது படைத் தலைமையக 593ஆவது படைப் பிரிவின் ; 5ஆவது இலங்கை சிங்கப் படையினரால் மணல் மூடைகள் போன்றன இக் குளக்கட்டை சுற்றி இடப்பட்டதுடன் இதற்கான ஒத்துழைப்பை பொது மக்களும் வழங்கினர்.

முல்லைத் தீவூ பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் வழிகாட்டலின் கீழ் ; 59ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களின் கண்காணிப்பின் கீழ் 593ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் லங்கா அமரபால அவர்களின் தலைமையில் இப் படையினர் மேற்படி பணிகளை மேற்கொண்டனர்.

அதேவேளை 64ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களின் தலைமையில் 23ஆவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 17ஆவது (தொண்டர்) கஜபா பயைணியின் படையினரால் கோடலிகள்ளு பிரதேசத்தின் குளக்கட்டின் திருத்த வேலைப்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் நீர்பாசன திணைக்கள அதிகாரிகளால் 64ஆவது பாதுகாப்பு படைத் தலைமயக தளபதியவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் காணப்படும் கமணந திணைக்களத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து (சுமார்15மீ பரப்பைக் கொண்ட) வடிகாணின் திருத்த வேலைப்பாடுகள் கடந்த திங்கட் கிழமை (12) மேற்கொள்ளப்பட்டது. Buy Sneakers | Sneakers