Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st May 2018 18:30:30 Hours

59 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட டி – 20 கிரிக்கட் போட்டிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் வனிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 593 ஆவது படைத் தளபதி கேர்ணல் ஏ.எச்.எல்.ஜி அமரபால அவர்களது பூரண ஒத்துழைப்புடன் முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த போட்டிகள் இடம்பெற்றன.

இந்த இறுதிச் சுற்றுப் போட்டிகள் முல்லைத்தீவு பொது மைதானத்தில் (3) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன. இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 51 கழகங்கள் பங்கு பற்றின இவற்றினுள் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் கழகங்கள் பங்கு பற்றின.

இந்த போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் சந்திரன் மற்றும் நண்பர்கள் கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற இடையில் சந்திரன் அணியினர் 162 ஓட்டங்களைப் பெற்று வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டனர். உதயன் அணியினர் மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டனர்.

இந்தப் போட்டியில் முல்லைத்தீவு நண்பர்கள் அணியைச் சேர்ந்த இரத்தினபுரியை பிறப்பிடமாகவும் புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்ட சிங்கள சகோதரனான விஜயரத்ன அவர்களும் பங்கு பற்றி சிறப்பாக ஆட்டத்தை மேற்கொண்டார்.

இந்த இறுதிச் சுற்றுப் போட்டிக்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களும் அதிதிகளாக ,ஹேமால் மென்டிஸ், இலங்கை கிரிக்கட் அணியின் அஜந்த மென்டிஸ் அவர்களும் வருகை தந்தனர்.

மேலும் இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சி.எஸ் எடிபொல, 59 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் ருவன் வனிகசூரிய, 64 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் கே.ஜே ஜயவீர, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி டப்ள்யூ.டீ.சி.கே கொஷ்தா, 593 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி ஏ.எச்.எல்.ஜி அமரபால அவர்கள் கலந்து கொண்டனர்.

affiliate link trace | Womens Shoes Footwear & Shoes Online