Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th May 2018 18:02:18 Hours

58 அவது படைப் பிரிவின் படையினர்களால் அனர்த்த மீட்பு பணிகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தின் பாதிப்படைந்த பிரதேசங்களான ரத்னபுரி, எலபாத அணைக்கட்டுகளை பாதுகாக்கும் நிமித்தம் 58 அவது படைப் பிரிவிற்குட்பட்ட 583 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 6 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையினர்களால் (26) ஆம் திகதி சனிக் கிழமை மண் மூட்டைகளை பயன்படுத்தி அணைக்கட்டுகள் சீரமைக்கும் நடவடிக்கை மேற் கொள்ளப்ட்டது.

எலபாத அணைக்கட்டுகளின் நீர் மட்டம் கூடியதால் இப் பிரதேசத்தில் 25 வீடுகள் முற்றாக நீரில் மூழ்கின.இந்த அனர்த காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 32 க்கும் அதிகமான இராணுவத்தினர் கலந்து கொண்டார்கள். ஆதிக நீர் மட்டம் காரணத்தால் வான் கதவுகளால் நீர் மட்டத்தை கட்டுப் படுத்த முடியாத நிமித்தம் 583 ஆவது படைப் பிரிவின் படையினர்களால் சனிக் கிழமை இரவு நேரத்தில் மணல் மூட்டைகளை பயன்படுத்தி ஏற்படும் சேதத்தை குறைக்க முடிந்தது.

இப் பணியானது 58 ஆவது படைப்பரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதன் பெரேரா அவர்களின் ஆலோசனைக்கமைய 9 ஆவது கெமுனு ஹேவா படையணியின் படையினர்களால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு புலத்சிங்கள,யடகம்பிடிய பாடசாலையில் தற்காலிக தங்கும் இட வசதிகள் மற்றும் தொலைபேசி வைத்திய சேவையும் வழங்கப்ட்டது.

இந்த வைத்திய சேவையானது புலத் சிங்கள பிரதேச செயலக பிரிவின் பரகொட மேற்கு மக்கள் சுகாதார பரிசோதனை நிலையத்தில் இடம் பெற்றதோடு பாதிக்கப்பட்ட இம் மக்களுக்கு வாகன போக்குவரத்து வசதிகளும் வழங்கினர். அதேபோல் யடகம்பிடிய பாடசாலையில் தற்காலிக தங்கும் இட வசதிகளுக்காக 58 ஆவது படைப்பரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதன் பெரேரா அவர்களால் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

அதேபோல் (26) ஆம் திகதி சனிக் கிழமை இப் படைப் பரிவின் கீழ் இயங்கும் 9 ஆவது கெமுனு ஹேவா படையணியின் 16 படையினர்களால் யடகம்பிடிய பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட முதியோர் இல்லத்தில் காணப்பட்ட குப்பைகளும் அகற்றப்பட்டு சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்ட்டது.

buy footwear | Nike Shoes