Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

12th July 2019 21:53:05 Hours

24ஆவது படைத் தலைமையகத்தின் புதிய தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

ஆம்பாரை மல்வத்தையில் அமைந்துள்ள 24ஆவது படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக கஜபா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஏ ஐ மாரசிங்க அவர்கள் தமது கடமைப் பொறுப்பை கடந்த வியாழக்கிழமை (11) இப் படைத் தலைமையக காரியாலயத்தில் ஏற்றார்.

இதன் போது மத வழிபாடுகள் மற்றும் இராணுவ முறைக்கமைய 24ஆவது படைத் தலைமையக புதிய படைத் தளபதியவர்களின் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வு 08ஆவது இலங்சை தேசிய பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மஹா சங்க ரத்தின தேரர்களின் பங்களிப்போடு செத் பிரித் போன்ற மத வழிபாடுகள் போன்றன இடம் பெற்றதோடு இதன் போது இப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியான பிரிகேடியர் அதுல மாரசிங்க அவர்கள் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தை இட்டு தமது கடமைப்பொறுப்பை மேற்கொண்டார்.

ஆதனைத் தொடர்ந்து இப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியவர்கள் இப் படைத் தலையைமக வளாகத்தில் மாங் கன்றை நட்டார். அதன் பின்னர் படையினருடன் உரையாற்றினார்.

இந் நிகழ்வில் பல உயர் அதிகாரிகள் மற்றும் 241ஆவது மற்றும் 242ஆவது படைத் தலைமையக தளபதிகள் 24ஆவது படைத் தலைமையக நிர்வாக கேர்ணல் அதிகாரி மற்றும் இப் படைத் தலைமயக ஒருங்கிணைப் அதிகாரி போன்றோர் கலந்து கொண்டனர்.