Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2019 12:00:04 Hours

233 ஆவது படைத் தலைமையகத்திற்கு புதிய படைத் தளபதி பதவியேற்பு

இலங்கை இராணுவத்தின் 233 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதியா கேர்ணல் ஆர். எல்விடிகல அவர்கள் இம்மாதம் (06) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாத நிகழ்வுகளின் பின் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பதவியேற்றார்.

இவர் இந்த படைத் தலைமையகத்தில் நியமிக்கப்பட்ட 26 ஆவது படைத் தளபதியாவார். இதற்கு முன்பிருந்த இந்த படைத் தலைமையகத்தின் படைத் தளபதியான கேர்ணல் கே.ஏ சமரசிரி அவர்களின் இடமாற்றத்தின் பின்பு புதிய படைத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.

புதிய படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி கஜபா படையணியின் இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து தலைமையக வளாகத்தினுள் படைத் தளபதியினால் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது 6 ஆவது கஜபா படையணி, 18 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின், 5 ஆவது இராணுவ மகளீர் படையணியின் கட்டளை அதிகாரிகள் இணைந்திருந்தனர்.latest Running | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals