Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd February 2019 09:58:03 Hours

2018ஆம் ஆண்டிற்கான காற்பந்தாட்டப் போட்டியின் வெற்றியீட்டிய இலங்கை இராணுவ போர்க் கருவிப் படையினர்

2018ஆம் ஆண்டிற்கான படைத் தலைமயகங்களுக்கிடையிலான காற்பந்தாட்டப் போட்டிகள் பனாகொடை உள்ளக அரங்கில் கடந்த வியாழக் கிழமை (21) இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கலந்து கொண்டதோடு இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது இராணுவ காற்பந்தாட்ட சங்கத்தின் தலைவரும் மற்றும் நிர்வாகப் பணிப்பகத்தின் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் தேவிந்த பெரேரா அத்துடன் விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க அவர்களால் பிரதம அதிதியவர்கள் வரவேற்கப்பட்டார்.

அதன் பிற்பாடு அனைத்து விளையாட்டாளர்களும் ஒன்றினைந்து காணப்பட்டதோடு இராணுவ கீதம் போன்றனவும் இசைக்கப்பட்டது. இதன் போது படைத் தலைமையகங்களின் அணிவகுப்பு இடம் பெற்றதோடு காற்பந்தாட்ட ரசிகர்கள் போன்றோரும் இதன் போது பங்கேற்றனர்.

அந்த வகையில் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த காற்பந்தாட்டப் போட்டிகளில் விஜயபாகு காலாட் படையணி மற்றும் இலங்கை இராணுவு போர்க் கருவிப் படையினர் போன்ற குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற இறுதிச் சுற்றுப் போட்டிகளில் இலங்கை இராணுவு போர்க் கருவிப் படையினர் வெற்றி பெற்றதோடு இரண்டாம் இடத்தை விஜயபாகு காலாட் படையணி மற்றும் மூன்றாம் இடத்தை இலங்கை சிங்கப் படையினர் போன்றோர் பெற்றுக் கொண்டனர்.

இதன் போது இந் நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கான பதங்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்றன வழங்கப்பட்டது.

அதேவேளை 2018ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளின் போது சான்றிதழ் நிகழ்வுகளும் இடம் பெற்றது. இதன் போது நன்றியுரையானது இராணுவு காற்பந்தாட்ட சங்கத்தின் பிரதித் தலைவரான கேர்ணல் மஞ்சுள காரியவசம் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதிப் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அத்துடன் இராணுவ தொண்டர் படையணியின் மற்றும் இலங்கைப் பீரங்கிப் படையணியின் தளபதிகள் போன்றோரும் கலந்து கொண்டனர். bridgemedia | Nike